சமுர்த்தி உத்தியோகத்தர் எனக்கூறி யாழில் பண மோசடி

Published By: Vishnu

16 Mar, 2023 | 12:22 PM
image

சமுர்த்தி உத்தியோகத்தர்  என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும்  மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோர்களையும், அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை  பெறும் முதியவர்களையாம் இலக்கு  வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது.

புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை  அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் எம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு  வழங்குவோம் என கூறி முதியவர்களிடம் பணம் பறித்து செல்லும் சம்பவங்கள் உடுவில் கோப்பாய் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மை நாட்களில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் 16 ஆம் திகதி  ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வயோதிப பெண் ஒருவரிடம் 19ஆயிரம் ரூபா பெற்றுச்சென்றுள்ளார்.

மேற்படி சம்பவம் இடம் பெற்றிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சரவணை பகுதியில் NP - HX 3125 இலக்க மோட்டார் சைக்கிளில் நடமாடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த நபர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஊர்காவற் துறை பிரதேச செயலக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிளில் சென்று நல்லூர் பகுதியில் ஏற்கனவே ஒருவர் மோசடி செய்திருந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஏழாலை பகுதியைச் சேர்ந்தவருடையது என அடையாளம் காணப்பட்டது. 

விசாரணைகளின் போது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை தான் விற்பனை செய்ததற்கான ஆவணத்தை காண்பித்ததாக ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் ஆரம்பம்...

2025-03-19 12:10:26
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29