மலையக அரசியல் அரங்கத்தின் சர்வதேச மகளிர் தின விழா

Published By: Ponmalar

16 Mar, 2023 | 11:23 AM
image

மலையக அரசியல் அரங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின சிறப்பு உரையரங்கம் ஹட்டன் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள CSC மண்டபத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

மலையகப் பெண்கள் அரங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சந்திரரேகா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான கோகிலம் சுப்பையா வின் நினைவாக ‘வெளிநாட்டில் பணிப்பெண் வேலை : பிரச்சினைகளும் சவால்களும்’ (மலையகப் பெண்களை குறித்த சிறப்புப் பார்வை) எனும் தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி பஸீஹா அஸ்மி பிரதான உரையாற்ற உள்ளார்.

கோகிலம் சுப்பையா அவர்களின் சமூக - இலக்கிய வாழ்க்கைக் குறித்த குறிப்பையும் உரையாளர் பற்றிய அறிமுகத்தையும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வழங்குவார். உரையைத் தொடர்ந்து இடம்பெறும் உரையாடல் அரங்கத்தையும் அவரே நெறிப்படுத்த உள்ளார். அடையாளம் காணப்பட்ட பெண் செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. நன்றியுரையை மலையகப் பெண்கள் அரங்கத்தின் செயலாளர் இதயஜோதி வழங்குவதுடன் நிகழ்ச்சிகளை நிஷாந்தினி சரவணகுமார் தொகுத்தளிக்கவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02
news-image

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக தழிழர்...

2023-03-28 09:35:23
news-image

எவோட்ஸ் - 2023 சிறுகதைப் போட்டி

2023-03-27 18:50:52
news-image

அகில இலங்கை ஊடக படைப்பாக்க போட்டிகளில்...

2023-03-27 18:34:04
news-image

'ஈழத்து ஞானக்குழந்தை' விருதினை பெற்ற 5...

2023-03-27 18:34:38
news-image

கல்முனை சாஹிராவுக்கு பழைய மாணவ பிரதிநிதிகளால்...

2023-03-27 10:21:07
news-image

சிங்கப்பூரில் 'புரிந்துணர்வு கையொப்பமிடல்' நிகழ்ச்சி

2023-03-25 20:05:14
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய பால்குட...

2023-03-24 17:51:42