றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கு முதலாவது வெற்றி

Published By: Digital Desk 5

16 Mar, 2023 | 09:45 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டில் தனது முதல் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவி கடைசி இடத்தில் இருந்துவந்த றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதலாவது வெற்றியை புதன்கிழமை (15) சுவைத்தது.

UP வொரியர்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி. வை. பட்டில் பயிற்சியக விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் எலிஸ் பெரியின் துல்லியமான பந்துவீச்சு, கனிக்கா அஹுஜா, ரிச்சா கோஷ் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன றோயல் செலஞ்சர்ஸ்  பெங்களூர்  அணிக்கு 5 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 2 புள்ளிகளுடன் சிறந்த நிகர ஓட்டவேக அடிப்படையில் றோயல் செலஞ்சர்ஸ்  பெங்களூர் முதல் தடவையாக 4ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட UP வொரியர்ஸ் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் 9ஆவது ஓவரில் UP வொரியர்ஸ் அணியின் 5ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை 31 ஓட்டங்களாக இருந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவி அலிசா ஹீலி (1), தேவிகா வைத்யா (0), தஹ்லியா மெக்ரா (2) ஆகிய மூவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியமை UP வொரியர்ஸ் அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

இதன் காரணமாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிக இலகுவாக தனது முதலாவது வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் ஒரு பிடியையும் ஒரு ஸ்டம்ப்பையும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தவறவிட்டதைப் பயன்படுத்தி க்றேஸ் ஹெரிஸ், தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து UP வொரியர்ஸ் அணியை கௌரவமான நிலையை அடைய உதவினர்.

க்றேஸ் ஹெரிஸ் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 46 ஓட்டங்களையும் தீப்தி ஷர்மா 22 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரைவிட கிரான் நவ்கிரே 22 ஓட்டங்களையும் சொஃபி எக்லஸ்டோன் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் எலிஸ் பெரி 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொஃபி டிவைன் 4 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சோபனா ஆஷா 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 18 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை 14 ஓட்டங்களாக இருந்தபோது சொஃபி டிவைன் (14), அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா (0) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இந்த சுற்றுப் போட்டியில் மந்தனா 6ஆவது தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதுடன் 5ஆவது தடவையாக சுழல்பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

எலிஸ் பெரி (10), ஹீதர் நைட் (24) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் கனிக்கா அஹுஜா, ரிச்சா கோஷ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வெற்றிப் பாதையில் இட்டனர்.

30 பந்துகளை எதிர்கொண்ட கனிக்கா அஹுஜா 8 பவுண்டறிகள், 1  சிக்ஸுடன் 46 ஓட்டங்களைப் பெற்றதடன் ரிச்சா கோஷ் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஷ்ரேயன்கா பட்டில் ஆட்டம் இழக்காமல் 5 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்றேஸ் ஹெரிஸ், சொஃபி எக்லஸ்டோன், தேவிகா வைத்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49