யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு சிறப்பு மகளிர் தின பட்டிமன்றம் நேற்று (14) மாலை யாழ். இந்திய மத்திய கலாசார நிலையத்தில் நடைபெற்றது.
யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பட்டிமன்றத்தில் நடுவராக தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திருமதி. கவிதா ஜவகர் கலந்து சிறப்பித்தார்.
'இளம் தலைமுறையினரை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கா, சமூகத்துக்கா' என்ற தலைப்பில் சுவாரஸ்யமான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
'இளம் தலைமுறையினரை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கே உண்டு' என கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் திருமதி. மதன் கோசலை ஆகியோர் வாதிட்டனர்.
'இளம் தலைமுறையினரை வழிநடத்த வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கே உண்டு' என்ற அணியில் தனியார் நாளிதழ் பத்திரிகை ஆசிரியரும் பாடசாலை அதிபருமான ந. விஜயசுந்தரம், விரிவுரையாளர் செல்வி. கு.தயாளினி ஆகியோர் கருத்துக்களை வழங்கியிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM