யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஹேமாஸ், Clean Ocean Forceஉடன் கைகோர்ப்பு

Published By: Nanthini

15 Mar, 2023 | 05:19 PM
image

லங்கையின் வட பிராந்தியத்தில் காணப்படும் மிகவும் மோசமாக பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இரு மீன்பிடி கரையோரப் பகுதிகளான குருநகர் மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, Clean Ocean Forceஉடன் கைகோர்த்துள்ளது.

வட மாகாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தினசரி தூய்மைப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதற்காகவும், சமூக விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை பேணுவதற்காகவும் Clean Ocean Forceஉடன் கைகோர்த்துள்ள முதலாவது கூட்டாண்மை நிறுவனமாக ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி திகழ்கிறது. 

இந்தப் பணிகள் இரு கட்டங்களில் இடம்பெறும். 

1. மிதக்கும் பிளாஸ்டிக், PET மற்றும் இதர கழிவுகளை அகற்றுவது 

2. இயந்திரங்கள் மற்றும் மனித ஊழியர்களை பங்கேற்கச் செய்து, கீழ்ப் பகுதியில் காணப்படும் பிளாஸ்டிக்குகளை அகற்றுவது என்பவையாகும். 

இந்தத் திட்டத்தினூடாக சமூக பரம்பல் மற்றும் ஈடுபாட்டை ஏற்படுத்தி, யாழ்ப்பாண பிராந்தியத்தை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து விடுவித்து, அங்கு வசிப்போரின் ஈடுபாட்டுடன் பொருளாதார அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் பெருமளவான அபிவிருத்திச் செயற்பாடுகளால் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. 

இந்நிலையில் யாழ்ப்பாண குடா பகுதியினுள் பிளாஸ்டிக் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

குருநகர், பாசையூர் மற்றும் கச்சாய் போன்ற பகுதிகள் PET, ஒற்றைப் பாவனை பிளாஸ்டிக்குகள் மற்றும் பொலித்தீன் போன்றவற்றால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

கரையோரப் பகுதிகளில் இவை அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் மக்களினதும் கடல்வாழ் உயிரினங்களினதும் வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாண உள்ளூராட்சி சபை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) ஆகியவற்றுடன் Clean Ocean Force முத்தரப்பு உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை வட மாகாண ஆளுநர் மேற்பார்வை செய்கின்றார். 

இத்திட்டத்தில் கைகோர்த்துள்ள இதர பங்காளர்களாக மத்திய சூழல் அதிகார சபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், இலங்கை பொலிஸ் சூழல் பிரிவு, வட மாகாண சுற்றுலா பணியகம், இலங்கை பொலிஸ் கரையோரம் மற்றும் சுற்றுலாப் பிரிவு மற்றும் இதர பல தன்னார்வ அமைப்புகள் இணைந்துள்ளன.

1948ஆம் ஆண்டு எளிமையான நோக்கத்துடன் ஹேமாஸ் நிறுவப்பட்டது. 

இதன் நோக்கம், குடும்பங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவுவதே ஆகும். இந்த அடிப்படை நம்பிக்கையே 70 வருட காலமாக நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உயிரூட்டி வருகிறது. 

இன்று, நாம் எமது நுகர்வோர் வர்த்தக நாமங்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் நடமாடல் தீர்வுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக்கொடுக்க எம்மால் முடிந்துள்ளது. 

இலங்கையின் சமூக, பொருளாதார கட்டமைப்போடு பிணைந்துள்ள ஹேமாஸ், பிராந்தியத்தில் பங்களாதேஷுக்கும் தனது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளது.

எமது பயணத்தில் பன்முகப்படுத்தப்பட்ட, ஆர்வமுள்ள அணியினரில் நாம் முதலீடுகளை மேற்கொள்வதுடன், அர்த்தமுள்ள சேவை வழங்கல்களை உருவாக்குவது, நம்பிக்கையை வென்ற பங்காண்மைகளை ஊக்குவிப்பது மற்றும் உள்ளடக்கமான உலகை கட்டியெழுப்பி, சகல பங்காளர்களுக்கும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவோம்.

Clean Ocean Force என்பது இலாப நோக்கற்ற நிறுவனமாக திகழ்வதுடன், பிளாஸ்டிக் கழிவுகள், மனிதர்களால் உருவாக்கப்படும் கழிவுகள் மற்றும் பிற கழிவுகளை இலங்கையின் கடற்கரைகளில் இல்லாமல் செய்வதை நோக்கி செயலாற்றும் அமைப்பாகவும் காணப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57