( பிரபு ராவ் )

இராமேஸ்வரம் அருகே புதுமடம் கடற்கரையில் 250 கிலோ எடையுள்ள கடல்பசு கரை ஒதுங்கியது. வனத்துறையினர் கைப்பற்றி பிரேதபரிசோதனை செய்து புதைத்துள்ளனர்.

இராமேஸ்வரம் அடுத்துள்ள புதுமடம் கடற்கரையில் நேற்று இறந்த நிலையில் கடல்பசு கரை ஒதுங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கரை ஒதுங்கிய கடல் பசுவை கைப்பற்றி இறந்தது குறித்து ஆய்வு செய்தனர். 

மன்னார் வளைகுடா கடல் பகுதயில் பாறையில் மோதி உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 

மேலும் இந்த கடல் பசு டுஹாங் டுஹாங் இனத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் என்றும், 2.8 மீட்டர் நீளமும், 1.85 மீட்டர் சுற்றளவும் 250 கிலோ எடையும் கொண்டதாகும். மண்டபம் கால்நடைத்துறை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வரவலைக்கப்பட்டு கடல்பசுவை பிரேதபரிசோதனை செய்து கடற்கரை அருகிலேயே புதைத்தனர்.