தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மிகவும் இக்கட்டான நிலையில் விளையாடிவருகின்றது.

தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 392 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள இலங்கை அணி 110 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள தென்னாபிரிக்க அணி 2 ஆம் நாள் நிறைவில் விக்கட்டிழப்பின்றி 35 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 317 ஆக அதிகரித்துள்ளது.

இன்றுடன் மூன்று நாட்கள் மீதமிருக்கின்ற நிலையில், தென்னாபிரிக்க அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாகவுள்ளதென கிரிக்கெட் ஆர்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.