நாடளாவிய ரீதியில் பல தொழிற்சாலைகள் இணைந்து இன்று (15) மாபெரும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல தொழிற்சங்க பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்தியசாலை வைத்தியர்கள் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வெளி நோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை. அத்தியாவசியமான அவசர சேவை பிரிவு மட்டுமே இயங்குகிறது இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதேவேளை பாடசாலைகளில் ஆசிரியர்கள் சமூகமளிக்காததால் பாடசாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதேவேளை பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக மிகக் குறைவான அளவில் காணப்பட்டது.
வங்கி ஊழியர்கள் பகிஸ்கரிப்பு காரணமாக வங்கி சேவைகள் இடம்பெறவில்லை.
புகையிரத ஊழியர்கள் விடுமுறை இரத்து செய்யப்பட்டதன் காரணமாக புகையிரத சேவை இடம்பெற்று வருகிறது. அதேவேளை அரச மற்றும் தனியார் பஸ் சேவைகள் வழமை போன்று இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM