தெற்காசியா முழுவதும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் இரு மடங்கு வேகத்தில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சர்க்கரையை கட்டுப்படுத்த மருத்துவர்கள் இன்சுலினை செலுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள்.
இதன்போது நோயாளிகள் பலரும் இன்சுலினை ஒரு முறை செலுத்திக்கொள்ளத் தொடங்கினால்... அதனை ஆயுள் முழுதும் செலுத்திக்கொள்ள நேரிடும் என அச்சம் கொள்கிறார்கள். இதனால் இன்சுலினை நேரடியாக எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் நோயாளிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இது தொடர்பாக சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் விளக்கமளிக்கையில்,
“இன்சுலின் செலுத்திக் கொள்வது.. கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு முதன்மையான மற்றும் முழுமையான நிவாரண சிகிச்சை. அதே தருணத்தில் சர்க்கரையின் அளவை மருந்து, மாத்திரை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்திக் கொண்டால்.. அவர்களுக்கு இன்சுலின் தொடர்ந்து செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இதனால் ஆயுள் முழுவதும் சர்க்கரை நோயாளிகள் இன்சுலினை செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அச்சம் தேவையற்றது.
டைப் 1 சர்க்கரை நோயாளிகள்.. அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவு, இன்சுலின் சுரப்பியின் சீரான இயங்கு திறன், இன்சுலின் சுரப்பி தடையற்ற செயல் திறன்.. ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து அவர்களுக்கு இன்சுலினை செலுத்த வேண்டியதிருக்கும். பெரும்பாலான டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செலுத்திக் கொள்வது அவசியமாகிறது.
ஆனால் டைப் 2 சர்க்கரை நோயாளிகள், அவர்களின் தங்களின் சர்க்கரை ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதனை புறக்கணித்தாலோ அல்லது அவர்களின் உடலில் வேறு இணை நோய்க்குறிகள் இருந்தாலோ இன்சுலின் செலுத்திக் கொள்ள வேண்டும்.
இன்சுலின் செலுத்திக் கொள்வது, இரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மை காரணமாக உடலில் வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படாததற்கான தற்காப்பு என்பதனையும் உணர வேண்டும். மேலும் இன்சுலின் செலுத்திக் கொண்டிருப்பவர்கள்.., மருத்துவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டலை முழுமையாக ஏற்றுக் கொண்டு, தங்களது வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டால்... ஓராண்டுக்குப் பிறகு அவர்களுக்கு இன்சுலின் செலுத்திக் கொள்வது தேவையற்றதாக இருக்கும். இதனால் இன்சுலின் குறித்த அச்சம் தேவையற்றது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
டொக்டர்: சிவப்பிரகாஷ்
தொகுப்பு: அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM