செங்கல் சூளை புகையை சுவாசித்த 5 பேர் மூச்சுத்திணறி பலி - இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்

Published By: Rajeeban

15 Mar, 2023 | 12:48 PM
image

செங்கல் சூளை புகையை சுவாசித்த 5 பேர் மூச்சுத்திணறி பலியான சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது

சத்தீஸ்கர் மாநிலம் மஹசாமுண்ட் மாவட்டம் காந்த்புல்ஹர் கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் நேற்று இரவு செங்கலை சுட தொழிலாளர்கள் தீ வைத்துள்ளனர்.

பின்னர், தொழிலாளர்கள் 6 பேர் செங்கல் சூளையில் தீ வைக்கப்பட்ட சுடு செங்கல் மேடை மீது நேற்று இரவு படுத்து உறங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை பிற தொழிலாளர்கள் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு சக ஊழியர்கள் 6 பேர் படுத்து கிடப்பதை பார்த்து அவர்களை எழுப்பியுள்ளனர். அப்போது, 5 பேர் உயிரிழந்த நிலையிலும் ஒரே ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, உடனடியாக அந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த 5 பேரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் செங்கல்சூழையில் செங்கல சூடுபடுத்த தீ வைத்துவிட்டு அதன் மேல் அடுக்கில் படுத்து உறங்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எவரெஸ்ட்டை வென்றதன் 70 ஆண்டு பூர்த்தி...

2023-05-29 17:07:59
news-image

இத்தாலியில் சுற்றுலா படகு கவிழ்ந்ததால் நால்வர்...

2023-05-29 16:08:21
news-image

பெலாரஸ் ஜனாதிபதிக்கு ரஸ்யாவில் நஞ்சூட்டப்பட்டதா ?...

2023-05-29 15:24:17
news-image

புட்டினின் கூலிப்படையான வாக்னர் குழுவை அவுஸ்திரேலியாவில்...

2023-05-29 12:56:25
news-image

போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை...

2023-05-29 13:00:52
news-image

மருத்துவமனைகளை இலக்குவைக்கும் யுத்த குற்றங்கள் சூடானில்இடம்பெறுகின்றன-...

2023-05-29 12:38:53
news-image

சீனாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்

2023-05-29 12:11:46
news-image

'கீர் பவானி மேளா' கொண்டாடும் காஷ்மீர்...

2023-05-29 11:44:10
news-image

ரஸ்யா பெலாரஸ் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு...

2023-05-29 11:04:51
news-image

மணிப்பூரில் 40 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

2023-05-29 10:26:13
news-image

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண்...

2023-05-29 10:02:46
news-image

துருக்கிய ஜனாதிபதித் தேர்தலில் தையீப் அர்துவான்...

2023-05-29 10:57:10