நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இன்றைய தினம் (15) முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பல பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் பரீட்சை நடவடிக்கைகளும் பிற்போடப்பட்டுள்ளது.
அதே நேரம் இலங்கை ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட ஆசிரியர்களும் பூரண ஆதரவு வழங்கியிருந்தனர்.
சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தந்த நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு வராமையினால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
அதே நேரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்களும் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் அத்தியாவசியமான அவசர சேவை பிரிவு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. வங்கி ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வங்கி சேவைகள் இடம்பெறவில்லை.
புகையிரத ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டதன் காரணமாக புகையிரத சேவை இடம்பெற்று வருகின்றதுடன் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM