உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மூன்றாவது தடவையாகவும் பிற்போட முயற்சியா?

Published By: Digital Desk 3

15 Mar, 2023 | 12:28 PM
image

இராஜதுரை ஹஷான்

அரசியல் அழுத்தங்களினால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை அரச அச்சகத் திணைக்கள தலைவர் கங்கானி லியனகே வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளில் ஈடுபட ஊழியர்கள் தயாராக உள்ள நிலையில் அரச அச்சகத் திணைக்கள தலைவர் தடையாக உள்ளார் என அரச அச்சகத் திணைக்கள சேவை சங்கத்தினர் தமது தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்புக்கான வாக்களிப்புச் சீட்டுக்களை  இன்று  புதன்கிழமை ஒப்படைப்பதாக அரச அச்சகத் திணைக்கள தலைவர் குறிப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 28,29,30 மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கெடுப்பை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது. இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் தபால்மூல வாக்கெடுப்பு தொடர்பில் சந்தேக நிலை காணப்படுகிறது.

வாக்குச்சீட்டு அச்சிடல் விவகாரத்தில் அரச அச்சகத் திணைக்கள தலைவர் இரட்டை நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறார். வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு நிதி நெருக்கடி ஒரு தடையில்லை. நிதியமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை தடையாக உள்ளது என தொழிசங்கத்திடம் குறிப்பிடுகிறார்.

நிதி வழங்காவிடின் வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியாது என அவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டதாக குறிப்பிடுகிறார் என அரச அச்சகத் திணைக்கள சேவை சங்கத்தின் செயலாளர் அசங்க சதுருவ தெரிவித்தார். வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளுக்கு நாங்கள் தயார், தலைவர் தடையாக உள்ளார் எனவும் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது 5 நாட்களுக்குள் தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்களையும், பொது வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்களை 20 நாட்களுக்குள் வழங்க முடியும் என அரச அச்சகத் திணைக்கள தலைவர் உறுதி வழங்கியதை அடிப்படையாக கொண்டு தான் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பு மற்றும் பொது வாக்கெடுப்புக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டது.

நிதி கிடைக்கப் பெறுவதில் தாமதம் ஆகவே வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியாது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார். ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

நிதி நெருக்கடி ஆகவே வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியாது என்ற தர்க்கத்தை முன்னிலைப்படுத்தி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மூன்றாவது தடவையாகவும் பிற்போடும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21