இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இருதரப்பு கடன்வழங்குநர்கள் தங்களிற்குள் ஒருங்கிணைப்பை அதிகரிக்கவேண்டும் - ஜனாதிபதி

Published By: Rajeeban

15 Mar, 2023 | 11:25 AM
image

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இரு தரப்பு கடன்வழங்குநர்கள் தங்களிற்குள் இணைந்து செயற்படவேண்டும் எனஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பகிரங்ககடிதமொன்றில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் தங்களிற்குள் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் இதன் மூலம் வங்குரோத்து நிலையில் சிக்குண்டுள்ள நாடு அதிலிருந்து மீள்வதற்கான அடுத்த கட்டநிலையை உருவாக்கவேண்டும் என ஜனாதிபதி பகிரங்க கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா சீனா பாரிஸ்கிளப் ஆகியன உத்தரவாதம் வழங்கியுள்ள நிலையில் மார்ச் 20 திகதி சர்வதேச நாணயநிதியத்தின் நாணயசபை இலங்கைக்கான கடன் உதவிக்கு அங்கீகாரத்தை வழங்கும் என இலங்கை எதிர்பார்க்கின்றது.

இன்னமும் செய்துமுடிக்கப்படவேண்டிய பல விடயங்கள் உள்ளன என ரணில்விக்கிரமசிங்க தனது பகிரங்க கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எங்களின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் உத்தியோகபூர்வ இருதரப்புகடன் வழங்குநர்களின் ஒருங்கிணைப்பை தொடர்ந்தும்பேணுமாறும் விஸ்தரிக்குமாறும் வலுப்படுத்துமாறும் நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன் என  ஜனாதிபதி தனது பகிரங்ககடித்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எங்களின் கடன் நெருக்கடிக்கான தீர்வை காண்பதற்கு  வெளிப்படையான சமமான திறமையான நடைமுறைப்படுத்தல்களை சாத்தியமாக்குவதற்கு இதுவே சிறந்த வழி என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்காக நான் எங்களின் பாரிஸ்கழக சகாக்களை குறிப்பாக ஜப்பானை இந்தியா சீனா ஆகிய எங்களின் இரு தரப்பு கடன்வழங்குநர்களுடன் ஒருங்கிணைப்பை வளர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என ஜனாதிபதி தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22