வன்னி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விவசாயக் கிணறுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். 

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பாவிற்கு சிவசக்தி ஆனந்தன் எம்.பி இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(ராம்)