இன்று (15) காலை 10 அலுவலக ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, அரசாங்கத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக இன்று புதன்கிழமை காலை 10 அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு டோக்கன் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்ட போதிலும், பயணிகளின் வசதிக்காக, இன்றைய அட்டவணையில் 13 அலுவலக ரயில் சேவைகள் வழக்கமான நேரத்தில் இயங்கும் என்று நேற்று இரவு (மார்ச் 14) அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கனேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம, மற்றும் களுத்துறை-தெற்கு ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு நோக்கி குறித்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் ரயில்வே ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
30க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டணி (PTUA) இன்று 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளது.
அதன்படி, மின்சாரக் கட்டண உயர்வு, நியாயமற்ற வரிக் கொள்கை திருத்தம் உள்ளிட்ட மக்கள் விரோத முடிவுகளுக்கு எதிராக மின்சாரம், குடிநீர், கல்வி, மருத்துவம், வங்கி, தபால், துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுட்டுள்ளன..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM