தொழிற்சங்க போராட்டங்கள் நாட்டையே பலவீனப்படுத்தும் - போக்குவரத்து அமைச்சர் புகையிரத தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை

Published By: Vishnu

14 Mar, 2023 | 07:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுவதை சகல அரச சேவையாளர்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் நாட்டையே பலவீனப்படுத்தும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டார்.

பொருளாதார ஸ்தீரப்படுத்தலுக்காக மொத்த அரச சேவையாளர்களில் 10 சதவீதமானோரிடமிருந்து தான் தற்போது வரி அறவிடப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து தேசிய வருமானம் முன்னேற்றமடைந்தவுடன் அதன் முதல் பயன் அரச ஊழியர்களுக்கு ஏதாவதொரு வழிமுறையில் வழங்கப்படும்  எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலான பணிப்புறக்கணிப்பு போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை. இயலுமான அளவு ஒத்துழைப்பு வழங்கி புகையிரத சேவையை முன்னெடுத்துச் செல்வோம் என புகையிரத தொழிற்சங்கத்தினர் போக்குவரத்து அமைச்சரிடம் வாக்குறுதி வழங்கினார்கள்.

புகையிரத சேவை தொழிற்சங்கங்களுக்கும், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று  (14) செவ்வாய்க்கிழமை போக்குவரத்து அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள என்பதை சகல தரப்பினரும் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் நாட்டு மக்களுக்கு சேவை செய்வது அரச சேவையாளர்களின் முதல்தர பணியாகும்,பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளுக்கு அமையவே வரி கொள்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் அவதானமிக்க நிலையில் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் உட்பட முதனிலை பொருளாதார நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது.நாணய நிதியத்தின் உத்தரவாதத்தின் பின்னரே இலங்கையின் கடன் நிலைபேறான தன்மைக்கு ஸ்தீரப்படுத்தப்படும்.

மொத்த அரச சேவையாளர்களில் 10 சதவீதமான தரப்பினரிடமிருந்து தான் தற்போது வரி அறவிடப்படுகிறது. மாற்று வழிமுறைகள் ஏதும் இல்லாத காரணத்தால் தான் மாதம் ஒரு இலட்சம் சம்பளம் பெறும் தரப்பினரிடமிருந்து வரி அறவிடும் தீர்மானம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களினால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற முடியாமல் போனால் நாடு கடந்த ஆண்டை காட்டிலும் மிக மோசமான,பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ளும்,இதனை எவராலும் தடுக்க முடியாது.இதுவே உண்மை.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுவதை சகல அரச சேவையாளர்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காகவே துறைமுகம்,விமான சேவை,புகையிரத சேவை,போக்குவரத்து மற்றும் தபால் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

புகையிரத சேவை துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பொறுப்புடன் செயற்பட்டுள்ளேன்.அரச சேவை நியமனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும் புகையிரத சேவையில் நிலவும் வெற்றிடத்தை கருத்திற் கொண்டு ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து புதிய நியமனங்களை பெற்றுக்கொடுத்துள்ளேன்.

ஆகவே நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடுவதை இயலுமான அளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்,பிரச்சினைகள் காணப்படுமாயின் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணலாம் என அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

பொது பயணிகளை நெருக்கடிக்குள்ளாகும் வகையிலான போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை,இயலுமான வரை புகையிரத சேவையை முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைப்பு வழங்குவோம் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்,புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கத்தின் பிரதிநிதிகள் போக்குவரத்து அமைச்சரிடம் வாக்குறுதி வழங்கினார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04