மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க எதிர்க்கட்சிகள் முதலில் ஒன்றுபட வேண்டும் - சரித ஹேரத்

Published By: Vishnu

14 Mar, 2023 | 07:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவுக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறாது. ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் முதலில் ஒன்றுபட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து மாற்று திட்டம் ஏதும் இல்லை  என குறிப்பிட்டுக் கொண்டு நாட்டை தொடர்ந்து கடன் நெருக்கடிக்குள் தள்ளும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயற்படுகிறார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததை போல் ஜனாதிபதி கருத்துரைக்கிறார்.

2015-2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் 23.4 பில்லியன் டொலர் முதல் 38.7 பில்லியன் டொலர் வரை வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது.

குறுகிய நான்கு வருட காலப்பகுதியில் வெளிநாட்டு கடன் பெறல்65 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் 5 பில்லியன் டொலராக காணப்பட்ட சர்வதேச பிணைமுறிகள் கடன் 15 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை பொய் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மறுக்க முடியுமா?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது சுய சிந்தனை இல்லாமல் இருக்கிறார்கள்.பொருளாதாரம் தொடர்பில் அவர்களுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை,பொருளாதார தொடர்பில் அவர்களுக்கு எவ்வித அறிவும் கிடையாது.பொதுஜன பெரமுனவின் பலவீனத்தை ஜனாதிபதி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார். ஆகவே பொதுஜன பெரமுனவிற்கு கடவுள் துணை.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தற்போது இழுபறி நிலையில் உள்ளது. சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்புடன் செயற்பட்டாலும்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு தடையாக செயற்படுகிறார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவுக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார்.ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் இடம்பெறாது. நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படும் அரசாங்கத்துக்கு எதிராகவும் முதலில் எதிர்க்கட்சிகள் ஒன்று பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19
news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49
news-image

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கட்டுநாயக்கவில்...

2026-04-11 14:28:17