(எம்.மனோசித்ரா)
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தில் இலங்கை அரசு 2016 ஆம் ஆண்டில் கையொப்பமிட்டுள்ளது.
குறித்த சமவாயத்தின் 04 ஆவது உறுப்புரைக்கமைய இயலாமைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு எவ்வித பாகுபாடுகளின்றி சகல இயலாமையுடன் கூடிய நபர்களின் அனைத்துவித மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் போன்றவற்றை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், அதுதொடர்பான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் சட்டத்தை முடிவுறுத்தி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவும், மேற்படி குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆரம்ப சட்டவரைபை அடிப்படையாகக் கொண்டு குறித்த கருமங்களுக்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதியும், நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM