புகையிரத ஊழியர்களின் விடுமுறை இரத்து சகலரும் நாளை சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் - புகையிரத திணைக்களம்

Published By: Digital Desk 5

14 Mar, 2023 | 05:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உடன் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத திணைக்களத்தின் சகல ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, ஆகவே சகல ஊழியர்களும் நாளையதினம் அவரவர் கடமைகளில் ஈடுபட வேண்டும் என புகையிரத திணைக்களம் புகையிரத சேவை ஊழியர்களிடம் வலியுறுத்தியுள்ளது.

அத்தியாவசிய சேவை தொடர்பான வர்த்தமானி,அமைச்சு மட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆகியவற்றுக்கு முரணாக செயற்படும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பொது போக்குவரத்து சேவையை வினைத்திறனான முறையில் முன்னெடுக்குமாறும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன புகையிரத திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய பொது மக்கள் சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புகையிரத திணைக்களத்தின் சகல ஊழியர்களின் விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

2023.02.27ஆம் திகதி 2327 கீழ் 07 ஆம் இலக்கம் என்ற அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இலங்கை புகையிரத சேவை அத்தியாவசிய பொது மக்கள் சேவையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதற்கமைய 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புகையிரத திணைக்களத்தின் சகல ஊழியர்களின் விடுமுறைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் இரத்துச் செய்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு அமைய புகையிரத திணைக்கள சேவையாளர்கள் அனைவரும் நாளைய தினம் அவரவர் கடமைகளில் ஈடுபட வேண்டும். சேவைக்கு சமுகமளிக்க முடியாத தரப்பினர் அதற்கான காரணத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் உரிய அதிகாரிகளிடம் முன்வைக்க வேண்டும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவை தொடர்பான வர்த்தமானி மற்றும் அமைச்சு மட்டத்தில் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு முரணாக செயல்படும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சு புகையிரத திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

பொது போக்குவரத்து சேவைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. புகையிரத சேவைத்துறையை அடிப்படையாக கொண்ட பிரச்சினைகள் ஏதேனும் காணப்படுமாயின் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன புகையிரத தொழிற்சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08