தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு விஸ்தரிக்கப்படுமா?

Published By: Digital Desk 3

14 Mar, 2023 | 04:04 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமை, நியாயமற்ற வரிக்கொள்கை, கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படாமை மற்றும் இணக்கம் தெரிவித்து அதனை நிறைவேற்றாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்கங்கள்  தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

அரசாங்கத்தின் வரி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மீளப் பெறுமாறு வலியுறுத்தியும் அரச மருத்துவ அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதனிடையே போராட்டம் இன்று மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 

நாளைய தினம் போராட்டம் தீவிரமடையும் என அரச மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளது.

விசேட வைத்திய சங்கத்தினர் உட்பட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும் நேற்று காலை 8 மணி முதல் மேல், தென் , மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கத்தின் வரி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழில்வல்லுனர்களின்  தொழிற்சங்க (கடந்த 9ஆம் திகதி ஆரம்பித்த )  நடவடிக்கைகளுக்கு இணையாக இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு வந்த  நோயாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்படவில்லை. கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை, பாணந்துறை, களுத்துறை போதனா வைத்தியசாலைகள், காலி வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலைகளுக்கு வருகை தந்த நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்படாமல் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். 

மேலும் அம்பாந்தோட்டை வைத்தியசாலை, கராபிட்டிய வைத்தியசாலை, ஹட்டன், டிக்கோயா, பொகவந்தலாவ, அம்பாறை வைத்தியசாலைகளும் பணிபகிஷ்கரிப்னால் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. மாத்தளை வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த நோயர்களுக்கான சிகிச்சை பிரிவுகளும்  இயங்காமையால் நோயளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது வைத்தியசாலைகளுக்கு வருகை தந்த மக்கள் "தாம் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களை கூட  கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது சிகிச்சைகளுக்காக அரச வைத்தியசாலைகளுக்கு வரும் எமக்கு இங்கு சிகிச்சை வழங்கப்படவில்லை. மருந்துகள் தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்யுமாறு கூறுகிறார்கள். மருந்துகளின் விலையோ பாரியளவில் அதிகரித்துள்ளது. அன்றாடம் கூலி தொழில் செய்து பெற்றுக் கொள்ளும் சம்பளத்தை விட மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாம் பாதிக்கப்படுகிறோம். இது தொடர்பில் அரசாங்கம் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் "என்று கூறுகிறார்கள்.

வைத்தியசாலைகளுக்கு வருகை தந்தவர்கள்  நீண்ட தூரங்களிலிருந்து பல மணித்தியாலங்கள் பயணித்து வருகை தந்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்தியசாலைகளில் நீண்ட நேரங்கள் காத்திருந்துள்ளதோடு பலர் முச்சக்கரவண்டிகள் கட்டணம் செலுத்தி வருகை தந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை நாளைய தினம் இடம்பெறவுள்ள நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களும் இணையவுள்ளன. 

இதன் காரணமாக முற்றாக சுகாதாதுறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக பாதிக்கப்படுவது  நாட்டு மக்களே!,

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து  சிரமப்படும் மக்கள்  தற்போது சுகாதார துறையினரின் தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டும் கதையாக  மாறியுள்ளது.

ஆரம்பத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி  உரிய தீர்வுகள் தொழிற்சங்கங்களுக்கு  பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால் இன்று நாட்டு மக்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இறுதியில் எது எவ்வாறு இருப்பினும் நாட்டு மக்களே பாதிக்கப்படுகிறார்கள்.

(படப்பிடிப்பு: ஜே. சுஜீவ குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13