(எம்.மனோசித்ரா)
கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் காணப்பட்டால் அது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்க முடியும்.
எவ்வாறிருப்பினும் காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்க ஒருபோதும் தயாராக இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த வாரங்களில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பொலிஸாரினால் உபயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் செவ்வாய்கிழமை (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் சந்தேகம் காணப்படின் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்க முடியும். காலாவதியான விஷத் தன்மையுடைய கண்ணீர்ப்புகைக் குண்டுகளை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை.
எனவே கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தொடர்பில் நிரூபிக்கக் கூடிய சாட்சிகள் காணப்பட்டால், குறித்த சாட்சிகளுடன் சென்று பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தால் அது தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , அதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
பாதுகாப்புதுறையினரின் சில செயற்பாடுகள் தொடர்பில் எம் அனைவருக்கும் முழுமையான தெளிவு கிடையாது. கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத பொலிஸாரும் எமது நாட்டில் காணப்பட்டனர். இவை தொடர்பிலும் இன்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM