மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் தொழிற்சங்க நடவடிக்கை தேசத்துரோகமாகும் - அரசாங்கம்

Published By: Vishnu

14 Mar, 2023 | 03:06 PM
image

(எம்.மனோசித்ரா)

மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் வகையில் செயற்பட்டு அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதானது தேசத்துரோகமாகும்.

இதனை நாம் தேசிய குற்றமாகவே கருதுகின்றோம். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று அதிபர் , ஆசிரியர்களிடம் கேட்டுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று (14) செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தாமதமடைந்துள்ளமையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் கல்வி அமைச்சரால் அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி சீர்குலையும் வகையில் கடந்த காலங்களில் எந்தவொரு ஆசிரியர்களும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கவில்லை.

ஆனால் அண்மைக்காலமாக சில அரசியல் குழுக்கள் நியாயமற்ற நிபந்தனைகளை முன்வைத்து ஆசிரியர்களை ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைத்துச் செல்கின்றன.

இது துரிதிஷ்டவசமான செயற்பாடாகும். அரச வருமானத்தை அதிகரிப்பதற்காகவே வரி அதிகரிக்கப்பட்டது. இது அரசாங்கம் விருப்பத்துடன் மேற்கொண்ட தீர்மானமல்ல.

எனவே நிலைமையைப் புரிந்து கொண்டு உரிய நேரத்தில் தேசிய பரீட்சைகளை நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு அதிபர் , ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இவற்றை மீறி அதிபர் ஆசிரியர்களால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமானால் அது தேசத்துரோகமாகும். இதனை தேசிய குற்றச் செயலாகவே நாம் காண்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51