ஹெமடெமிஸிஸ் எனும் ரத்த வாந்தி பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Ponmalar

14 Mar, 2023 | 12:49 PM
image

குடல் புண், உணவு குழாய் ரத்தக் கசிவு, மேல் இரைப்பை பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ரத்த வாந்தி எடுப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அண்மைய மருத்துவ ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

லட்சம் பேரில் ஏறத்தாழ 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு இத்தகைய ரத்த வாந்தி பாதிப்பு ஏற்படுவதாகவும், இதற்குரிய முழுமையான விழிப்புணர்வை பெற்று அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால், இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரண பெற இயலும் என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக ஒருவர் குருதியை வாந்தியாக எடுக்கத் தொடங்கினால், அது ஒரு தீவிர சிகிச்சைக்கான மருத்துவ நிலை என அறிந்து கொள்ள வேண்டும். இதனை மருத்துவ மொழியில் ஹெமடெமிசிஸ் என குறிப்பிடுகிறார்கள். இது ஒரு ஆபத்தான நிலை. இதற்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

அல்சர் எனப்படும் இரைப்பைப்புண், உணவு குழாயில் ரத்தக் கசிவு, கல்லீரல் பாதிப்பு, இரைப்பை மற்றும் இரைப்பையில் உள்ள ரத்த நாளங்களின் செயலிழப்புகள், இரைப்பை கட்டிகள், கதிர்வீச்சு சிகிச்சையின் பக்க விளைவுகள், ரத்தக் கசிவு தொடர்பான காய்ச்சல் போன்ற பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு ரத்த வாந்தி ஏற்படக்கூடும்.

இதற்கு மருத்துவர் பரிந்துரைக்கும் ரத்த பரிசோதனைகளையும், எண்டாஸ்கோபி பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சிலருக்கு இது புற்றுநோயின் அறிகுறியா? என்பது தொடர்பான பரிசோதனையும் பரிந்துரைக்கப்படலாம். ரத்த வாந்தியின் காரணத்தை துல்லியமாக கண்டறிந்த பிறகு, அதற்கான முதன்மையான நிவாரண சிகிச்சையை மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகளின் மூலம் வழங்குவர். சிலருக்கு கல்லீரல் பாதிப்பு, இரைப்பை புண், உணவு குழாய் ரத்தக் கசிவு ஆகியவை உறுதி செய்யப்பட்டால், சிலருக்கு நவீன சத்திர சிகிச்சையும் அவசியப்படலாம்.

டொக்டர்: முத்துக்குமார்
தொகுப்பு: அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்காலிக சிறுநீர் தேக்கமடைதல் எனும் பாதிப்பிற்குரிய...

2023-03-31 16:07:44
news-image

ரத்த நாள கட்டியை கண்டறியும் நவீன...

2023-03-31 18:14:41
news-image

உடல் வெப்பத்தை போக்கும் குளியல்

2023-03-30 21:50:12
news-image

நாட்பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவை...

2023-03-28 17:09:25
news-image

தொடக்க நிலையிலான ஆட்டிசம் பாதிப்பிற்கு முழுமையாக...

2023-03-27 14:17:26
news-image

வாந்தி - Vomiting

2023-03-25 12:03:56
news-image

அறைகளில் மணமூட்டியை பயன்படுத்தலாமா..?

2023-03-24 15:29:53
news-image

நீரிழிவு நோயாளிகளின் பாதங்கள் பாதிக்கப்படுவது ஏன்?

2023-03-22 17:08:33
news-image

வாய் புற்றுநோய் பாதிப்பிற்குரிய ஒருங்கிணைந்த சிகிச்சை

2023-03-21 15:44:01
news-image

புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்துக்கான நவீன சிகிச்சை!

2023-03-20 15:53:24
news-image

யுவைடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2023-03-18 16:51:18
news-image

பச்சையாக சாப்பிடாதீர்கள்!

2023-03-18 12:46:01