ஆக்கஸ் உடன்படிக்கை-அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி குறித்த அறிவிப்பை வெளியிட்டனர் அவுஸ்திரேலிய அமெரிக்க பிரிட்டன் தலைவர்கள்

Published By: Rajeeban

14 Mar, 2023 | 12:52 PM
image

அவுஸ்திரேலியா அமெரி;க்க இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து அணுசக்தியில் இயங்கும் புதிய நீர்மூழ்கி படையணியை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளன.

இதனடிப்பiயில் அக்கஸ் உடன்படிக்கையின் கீழ் அவுஸ்திரேலியா அமெரிக்காவிடமிருந்து 

மூன்று நாடுகளும் இணைந்து நவீனதொழில்நுட்பத்தில் இயங்ககூடிய நீர்மூழ்கி படைப்பிரிவை உருவாக்கவுள்ளன.

அவுஸ்திரேலிய அமெரிக்க பிரிட்டிஸ் தலைவர்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்

பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நீர்மூழ்கிகள் அணுசக்தியில் இயங்கும் அணுவாயுதங்களை கொண்டிராது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை அணுவாயுதங்கள் அற்ற நாடு என்ற அவுஸ்திரேலியாவின் உறுதிமொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் பைடன்தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை மூலம் பிரிட்டினிற்கு பின்னர் அமெரிக்காவின் நீர்மூழ்கிகளை கொள்வனவு செய்யும்இரண்டாவது நாடாக அவுஸ்திரேலியா மாறவுள்ளது.

புதிய நீர்மூழ்கிகள் தற்போதுஅவுஸ்திரேலியாவிடம் உள்ள நீர்மூழ்கிகளை விடவேகமாகவும் நீண்டதூரமும் செயற்படக்கூடியவை.

மேலும் இந்த நீர்மூழ்கிகள் மூலம் நீண்டதூரத்தில் வைத்து எதிரிகளை தாக்கும் வலிமையை அவுஸ்திரேலியா பெறும்.

இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் பயிற்சிக்காக அவுஸ்திரேலிய மாலுமிகள  அமெரிக்கா பிரிட்டனின் நீர்மூழ்கிகளிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

இந்த உடன்படிக்கையின் கீழ் அமெரிக்காவின் நீர்மூழ்கிகள் 2027 முதல் பேர்த்தில் நிலைகொண்டிருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் யுத்தநிறுத்தத்தை மீறிவிட்டது கடும் பதிலடிக்கு...

2025-06-24 13:44:15
news-image

ஈரானிலிருந்து ஏவுகணைகள் -இஸ்ரேல் இராணுவம் தெரிவிப்பு

2025-06-24 13:09:35
news-image

ஈரான் குறித்த இலக்குகளை எய்தியுள்ளோம் -...

2025-06-24 12:19:57
news-image

கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து ;...

2025-06-24 11:39:29
news-image

யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது -...

2025-06-24 11:01:11
news-image

ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலில் மூவர் பலி

2025-06-24 10:44:18
news-image

பிலிப்பைன்ஸில் 6.3 ரிச்டர் அளவில் பூகம்பம்

2025-06-24 10:01:18
news-image

மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ஈரான் ஆரம்பித்துள்ளது-...

2025-06-24 09:21:08
news-image

இதுவரை யுத்தநிறுத்தம் குறித்து உடன்பாடு எதுவுமில்லை...

2025-06-24 06:48:14
news-image

டிரம்பின் யுத்த நிறுத்த தகவல் முற்றிலும்...

2025-06-24 06:29:46
news-image

யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் - ஈரான்...

2025-06-24 06:10:07
news-image

நட்பு நாடான கட்டாருக்கு தாக்குதல் குறித்து...

2025-06-24 00:28:22