(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதிகளில் 13 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற வாகனத்தில் விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஏகல்லோயா- இங்கிரிய வீதியின் ஹல்வதுர சந்தியில் மோட்டார் சைக்கிள் வீதியில் இடையூறு விளைவிக்கும் விதமாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் வீதியில் வீசப்பட்டு மற்றொரு லொறியில் மோதுண்டு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 30 வயதுடைய தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
விபத்து தொடர்பில் இரு லொறிகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். புளத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, வராக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலலியத்த -இம்புலொவிட்ட வீதியில் பஸ் எதிர்திசையில் வந்த மோட்டார்சைக்கிளிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது காயமடைந்த நபர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 36 வயதுடைய நியந்துருபொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வரக்காப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM