இளைய தளபதி விஜயின் பைரவா படம் வரும் 12 ஆம் திகதி திரைக்கு வரவிருக்கின்றது, இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகின்றது.

இந்நிலையில் கேரளாவில் ஜனவரி 10 முதல் திரையரங்குகள் ஒரு சில பிரச்சனைகளால் மூடப்படுகின்றதாம், அதன் பிறகு எப்போது திறக்கப்படும் என்ற தகவல் இன்னும் வரவில்லை.

இதனால் பைரவா படம் கேரளாவில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்க, தற்போது வந்துள்ள இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 

கதை, திரைக்கதை, வசனம், எழுதி - பரதன் இயக்கும் பைரவா படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார்.

இளையதளபதி விஜயின் பைரவா திரைப்படத்தை சென்சார் குழுவினர் இன்று பார்த்து , படத்தை பாராட்டி படத்துக்கு “ U “ சான்றிதழ் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.