தன் நம்பிக்கை உள்ள எதிர்கால இளைஞர் யுவதிகளினை உருவாக்கல் எனும் தொனிப்பொருளைக் அடிப்படையாக கொண்டு கடந்த 2023 மார்ச் 11ம் திகதி வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தினால் இளைஞர் - யுவதிகளுக்கான தன்னம்பிக்கை வலுவூட்டல் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மனித மேம்பாட்டு அமைப்பின் ஸ்தாபகர், எஸ் ஏ எம் . அஸ்லமின் வழிகாட்டலிலும், மனித மேம்பாட்டு அமைப்பின் ஓட்டமாவடி பிரதேச பெண் அமைப்பாளரான எஸ் எப் .ஷிஹானி ,மனித மேம்பாட்டு அமைப்பின் ஓட்டமாவடி பிரதேச பெண் ஒருங்கினைப்பாளரான எஸ் எப் . ஷிமானி ஆகியோரின் ஏற்பாட்டில் வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியான, லேப்ட்டினல் கேர்ணல் ரவூப்பின் தலமையில் ,இந்த பயிற்சிநெறிகள் நடாத்தப்பட்டன.
மேலும், இந்நிகழ்வின் வளவாளரான, மேஜர். தமீம் அவர்களினால் இளைஞர் - யுவதிகளுக்கான விரிவுரைகளும், பயிற்சிகளும், களச்செயற்பாடுகளும் நடாத்தப்பட்டது.
இப் பயிற்சிப் பட்டறையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் - யுவதிகள் கலந்து சிறப்பித்தனர்.
பயிற்சி நிறைவின்போது அன்று மாலை மேஜர் தமீம்மினால் இந்த பயிற்சியில் கலந்துகொண்ட இளைஞர் - யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM