(எம்.வை.எம்.சியாம்)
சுகாதாரத்துறை தொடர்பில் வெளியாகும் செய்திகள் சில அடிப்படையற்றதாகும். நாட்டின் பிரதான நிலை ஊடகங்கள் என்ற வகையில் சுகாதாரத்துறை தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளமை எமக்கு கவலையளிக்கிறது.
மேலும் முதல் காலாண்டுக்குள் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளோம் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று (13) திங்கட்கிழமை சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை. நாட்டின் பிரதான நிலை ஊடகங்கள் சுகாதாரத்துறை தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளமை கவலைக்குரியது.
மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நிதி நிறுவனம் ஒன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக சுகாதாரத்துறை அமைச்சுக்கு 500 மில்லியன் டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளமை முற்றிலும் அடிப்படையற்ற தாகும்.
குறித்த நிதி நிறுவனம் 500 மில்லியன் டொலரை வழங்க கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் 100 மில்லியன் டொலர்களை மாத்திரமே வழங்கியுள்ளது.
அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் பின்னணயில் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கான மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள செய்தியும் அடிப்படையற்றதாகும். அவை உண்மைக்கு புறம்பானவையாகும்.
மருந்து இறக்குமதிக்கான விலைமனுகோரலுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பில் திறைசேரியின் செயலாளர் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. விலைமனுக்கோரல் வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெறுகின்றது.
மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும், திறைசேரியின் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
மேலும் முதல் காலாண்டில் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM