தீர்மானமிக்க இந்த சந்தர்ப்பத்தில் தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் - ஐக்கிய தேசிய கட்சி

Published By: Vishnu

13 Mar, 2023 | 05:14 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைப்பதற்கான தீர்மானமிக்க இந்த சந்தர்ப்பத்தில் தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொள்ள வேண்டாம். 

நிதி உதவி கிடைக்காமல் போனால் நாட்டின் பொருளாதாத்துக்கு பாரிய பாதிப்பாக அமையும் என ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அசோக்க த தனவங்கத சில்வா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (13 )இடம்பெற்ற செயதியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை இன்னும் ஓரிரு தினங்களில் கூட இருக்கிறது. இதன்போது இலங்கையிக்கு கடன் வழங்குவது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

என்றாலும் இலங்கைக்கு நிதி வழங்குவது தற்போது உறுதியாகி இருக்கும் நிலையில் நாட்டில் தொழிற்சங்க போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மிகவும் அத்தியாவசியமானதாகும். அதனால் தீர்மானமிக்க இந்த சந்தர்ப்பத்தில் போராட்டங்களை நடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் நாடு தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி நாட்டுக்கு மிக முக்கியமானதாகும்.

இந்த நிதி உதவி கிடைக்காமல் போனால்,  அனைத்து தரப்பினருக்கும் பாரிய பாதிப்பாக அமையும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதனால் தொழிற்சங்களுக்கு பிரச்சினை இருக்குமாக இருந்தால், அதற்கு தீர்வுகாண குறைந்தது 6மாதங்களாவது அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும். அதன் பின்னரும் தீர்வு கிடைக்காவிட்டால். தொழிற்சங்கங்கள் வீதிக்கிறங்கி போராட்டம் மேற்கொள்ளலாம்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் கட்ன் உதவி கிடைக்கப்போவதில்லை, அரசாங்கத்துக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. 

வெளிநாட்டு செலாவணியை அதிகரிக்க முடியாது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. ஆனால் தற்போது அந்நிய செலாவணி 68,8 வீதத்தால் அதிகரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்க இருக்கிறது. 

கடன் உதவி கிடைத்தால் பொருளாதாரம் பலமடைந்து பொருட்களின் விலை குறைவடையும் மக்களின் வாழ்க்கைச்சுமை குறைவடையும் இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை தடுப்பதற்கே தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்றன.

மேலும் தற்போது கொழும்பு துறைமுகத்துக்கு உலகில் இருக்கும் விசாலமான கப்பல் வந்திருக்கிறது. இதில் அதிகமான தனவந்தர்கள் வந்திருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், துறைமுக ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டங்களில் ஈடுபட்டால், குறித்த சுற்றுலா பயணிகள் பாதிகப்படுவார்கள்.

அதன் காரணமாக அவர்கள் எமது நாட்டில் எந்த செலவினங்களை மேற்கொள்ளாமல் திருப்பிச் செல்வதன் மூலம் எமக்கு கிடைக்க இருக்கும் அந்நிய செலாவணி இல்லாமல் போகிறது. 

அதனால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தற்போதைக்கு தொழிற்சங்க போராட்டங்களை கைவிட்டு, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைத்து தொழிற்சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13