ஒரு வாரத்துக்குள் 1100 ரஷ்ய படையினர் பலி: உக்ரேனிய ஜனாதிபதி

Published By: Sethu

13 Mar, 2023 | 02:30 PM
image

உக்ரேனின் பக்முத் நகரை கைப்பற்றவதற்கான சமரில் 1,100 இற்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளனனர் என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி கூறியுள்ளார்.

கைத்தொழில் நகரான பக்முத்தை கைப்பற்றுவதற்கு ரஷ்ய படையினர் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதியிலிருந்து முயன்று வருகின்றனர். 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமாகிய பின்னர் மிக நீண்டகாலமாக நடைபெறும் சமர் இதுவாகும்.

தற்போது பக்முத்தில் உக்கிரமான மோதல் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

பக்முத்தின் கிழக்குப் பகுதியை ரஷ்ய படையினர் மற்றும் ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழு ஆகியன கைப்பற்றியுள்ளன. அந்நகரின் மேற்குப் பகுதி உக்ரேனிய படையினர் வசம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 6 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்துக்குள் 1,100 இறகும் அதிகமான எதிரிப் படையினரை நாம் கொன்றுள்ளோம் என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி கூறியுள்ளார். அத்துடன், மேலு; சுமார் 1500 ரஷ்ய படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை? உக்ரேனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 220 உக்ரேனிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47