பிஜி தீவுகளில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் பெரும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பசுபிக் கடற்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பிஜியின் நாடி தீவில் இருந்து சுமார் 227 கிலோமீற்றர் தொலைவில், பத்து கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.