பக்கவாத பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க உதவும் புனர்வாழ்வு சிகிச்சை

Published By: Ponmalar

13 Mar, 2023 | 05:09 PM
image

கடந்த இரண்டு தசாப்தங்களை விட தற்போது பக்கவாத பாதிப்பிற்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை 50 சதம் உயர்ந்திருக்கிறது என்றும், தற்போது நான்கில் ஒருவர் அவருடைய வாழ்நாளில் பக்கவாத பாதிப்பிற்கு ஆளாகிறார் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

மேலும் பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்கிறார்கள். ஆனால் இத்தகைய பாதிப்பிற்கு பிறகான புணர்வாழ்வு சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்த முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மூளையில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக பக்கவாத பாதிப்பு உண்டாகிறது. இதன்போது எம்முடைய உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

இவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப புனர்வாழ்வு சிகிச்சை அவசியமாகிறது. ஏனெனில் இத்தகைய பாதிப்பிற்கு பிறகு அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி அலுவலகத்தில் பணியாற்றுவதோ அல்லது வேறு இடங்களில் வேலை செய்வதோ முழுமையாக சாத்தியமில்லை.

இந்நிலையில் இவர்களுக்கான புனர்வாழ்வு சிகிச்சை என்பது மீண்டும் இவர்களை தன்னிச்சையாக நாளாந்த பணிகளை அவர்களையே மேற்கொள்ள செய்வதாகும்.

அத்துடன் அவருடைய மனித வளத்தை சமூக மேம்பாட்டுக்கு பயன்படுத்துவது. இதற்கு பிசியோதெரபி எனப்படும் பிரத்யேக இயன்முறை சிகிச்சை அளிப்பது மட்டும் முழுமையான நிவாரணத்தை தருவதில்லை.

புனர்வாழ்வு சிகிச்சையில் இயன்முறை பயிற்சி சிகிச்சையுடன் உளவியல் மேம்பாட்டு சிகிச்சை மற்றும் சமூகத்துடனான நல்லிணக்க சிகிச்சை ஆகியவையும் இணைத்து வழங்கப்படுகிறது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கை, கால் ஆகியவற்றின் செயல் திறனை பிரத்யேக பயிற்சி மூலம் மீட்டெடுப்பது.... வேறு சிலருக்கு பேசுவதில் குறைபாடு இருக்கும்.

இவர்களுக்கு கஸ்டமைஸ்ட் ரிஹாபிலிடேசன் எனப்படும் பிரத்தியேக ஒருங்கிணைந்த புனர்வாழ்வு சிகிச்சை தேவைப்படும்.

இதன் போது Functional Electrical Stimulation, Robotic Technology, Wireless Technology, Virtual Reality போன்ற நவீன உத்திகளும் கையாளப்படுகின்றன.

பக்கவாத பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு, அதிலிருந்து முதன்மையான நிவாரண சிகிச்சை அளித்த பிறகு, அவர்களுக்கு மன அழுத்த பாதிப்பு அதிக அளவில் ஏற்படும். இதன்போது அவர்களுக்கு உளவியல் ரீதியிலான சிகிச்சை அளித்து, மனதினை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க வேண்டும்.

அவர்களிடமுள்ள மனித வளத்தை பயன்படுத்துதலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இதனை உணர்ந்து அவர்களிடமிருந்து மனித வளத்தை எமக்குத் தேவையான அளவிற்கு பெற வேண்டும் அதற்கு உகந்த பயிற்சியை அளிக்க வேண்டும்.

இத்தகைய புனர்வாழ்வு சிகிச்சையினை அளிக்கும் போது அவர்கள் பக்கவாத பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெற்று, மனதளவில் உற்சாகமாக பணியாற்ற தொடங்குவார்கள்.

டொக்டர்: மதுசூதன்
தொகுப்பு: அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04