“ஐயா, நான் எம்முடைய ஜோதிட நிபுணர் பரிந்துரை செய்த நாளில் தான் விற்பனை நிலையத்தைத் தொடங்கினேன். தொடக்க நாளில் இருந்த விற்பனை.. அடுத்தடுத்த நாள்களில் குறைந்து, தற்போது விற்பனை நிலையம் நட்டத்தில் இயங்குகிறது. இதனை தொடர்ந்து நடத்தலாமா? அல்லது விற்பனை நிலையத்தை வேறு ஒருவருக்கு மாற்றிவிடலாமா? என எண்ணத் தோன்றுகிறது.” என நண்பர் ஒருவர் வியாபாரத்தில் தான் தேர்ச்சியடையாத நிலையை விவரித்துக் கொண்டிருந்தார்.
அவரிடம் அந்த நண்பர், ‘நீ தினமும் அபிஜித் முகூர்த்த வேளை எனும் அற்புதமான தருணத்தை முழுமையாக பயன்படுத்துகிறாயா? என கேட்டார்.
அதற்கு அவர் ‘அபிஜித் முகூர்த்தமா?’ என கேட்டார்.
“நாளாந்தம் நண்பகல் நேரம் 11,45 முதல் 12,15 மணி வரையுள்ள தருணமே அபிஜித் முகூர்த்த தருணம். இந்த நேரம் வெற்றியைத் தரும் அற்புதமான தருணம். நீ விற்பனை நிலையத்தை ஜோதிட நிபுணர் பரிந்துரைத்த வகையில் கோதூளி முகூர்த்த தருணம் எனப்படும் காலை 5,45 முதல் 6,15 க்குள் கணபதி ஹோமம் செய்துவிட்டு விற்பனையைத் தொடங்கியிருப்பாய். ஆனால் கோதூளி முகூர்த்தத்தில் விற்பனை அங்காடியை திறந்துவிட்டு, அதில் விற்பனையை அபிஜித் முகூர்த்த காலவேளையான அன்றைய நண்பகல் 11,45 முதல் 12.15க்குள் தொடங்கியிருந்தால்.. உங்களுடைய விற்பனை நிலையம் இலாபமுடன் இயங்கியிருக்கும்” என விவரித்தார்.
இது தொடர்பாக ஜோதிட நிபுணர்கள் விளக்கமளிக்கையில்,“ஆம் உண்மை தான். அபிஜித் முகூர்த்த தருணம் வெற்றியைத் தரும். நண்பகலில் மட்டுமல்ல மாலை 5,45 முதல் 6.15 வரையிலான கோதூளி முகூர்த்த தருணமுமம் வெற்றியை அளிக்கும். இந்த தருணங்களுக்கு நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் போன்ற பஞ்சாங்க தோஷம் கிடையாது.
அதுமட்டுமல்ல.. ஒவ்வொரு நாளுக்கான அபிஜித் முகூர்த்த தருணத்திலும், நீங்கள் பிறந்த கிழமைக்கான கோதூளி முகூர்த்தம் மற்றும் அபிஜித் முகூர்த்த தருணத்தில் நீங்கள் நினைக்கும் விடயங்களுக்கான பிரார்த்தனையில் ஈடுபட்டால் உங்களது வேண்டுகோள் நிறைவேறும்.
உதாரணத்தில் நல்ல வேலை கிடைக்கவேண்டுமா.. அல்லது நீங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயரைச் சம்பாதிக்கவேண்டுமா.. திங்கட்கிழமையன்று அபிஜித் முகூர்த்த தருணத்தில் உங்களது கோரிக்கையை நினைத்து பிரார்தித்தால் அவை நிறைவேறும், சொந்த வீடு அமையவேண்டும் என்றால் செவ்வாய் கிழமையன்றும், குழந்தைப் பேறு கிடைக்கவேண்டும் என்றால் புதன்கிழமையன்றும், வெளிநாடு செல்லும் யோகம் அமையவேண்டும் என்றால் வியாழக்கிழமையன்றும், திருமணம் தடையில்லாமல் கைக்கூடவேண்டும் என்றால் வெள்ளிக்கிழமையன்றும், நீதிமன்ற வழக்குகள், காவல் நிலையப் பிரச்சினைகள் முடிவிற்கு வரவேண்டும் என்றால் சனிக்கிழமையன்றும், கர்ம வினைகள் அகலவும், உடல் நலம் மேம்படவும் வேண்டுமென்றால் ஞாயிற்றுக்கிழமையன்றும் அபிஜித் முகூர்த்த தருணங்களில் பிரார்த்திக்கவேண்டும்.
இவற்றையெல்லாம் விட உத்திராடம் நட்சத்திரத்தின் நான்காம் பாதம் மற்றும் திருவோணம் நட்த்திரத்தின் முதல் பாதம் ஆகிய இரண்டு நட்சத்திரத்தில் பிறந்தவர்களை கண்டறிந்து, அவர்களின் ஜாதகத்தை துல்லியமாக அவதானித்து, இவர்களின் பாகைகளைக் கணக்கிட்டு, இவர்களில் யார் அபிஜித் நட்சத்திரக்காரர்கள் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். பின் அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டால்.. உங்களது வாழ்வில் தொடர் வெற்றியைச் சாத்தியப்படுத்தலாம்.
சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM