கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் தீர்மானத்துக்கமைய நடராஜர் பணிக்குழுவினால் ஆனையிறவு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலையொன்று நேற்று (12) காலை 9.30 மணியளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள ஆனையிறவு பகுதியில் பிரதான வர்த்தக மையம், பாரம்பரிய உணவகம், எரிபொருள் நிலையம், நவீன குளியலறை, விளையாட்டு முற்றம் மற்றும் கடற்கரை உல்லாச விடுதி மற்றும் உணவகம், வங்கி வசதிகள் என்பவற்றுடன் கூடிய ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தை நிறுவும் மூல திட்டமிடல் வரைபடத்தின் அடிப்படையில் முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்ததையடுத்து, அங்கு இந்த நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இந்து மத சிவாச்சாரியார்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மா.வை. சேனாதிராஜா ஆகியோருடன் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்
27 அடி உயரமான இந்த நடராஜர் சிலை 6 அடி உயரமான பீடத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM