16 வருடங்களாக பெண்களின் உள்ளாடைகளை மிகவும் சூட்சுமமாக திருடிவந்த நபரை சுவிஸ் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சுவிஸில் பெண்கள் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து உள்ளாடைகளை சூட்சுமமாக திருடுவதில் வல்லவனாக வலம் வந்த 45 வயதுடைய நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர் 1999 ஆம் ஆண்டு முதல் குறித்த செயற்ப்பாட்டில் ஈடுபட்டுவந்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

கடந்த ஆண்டு மட்டும் இவர் வீடுகள் புகுந்து 100 க்கும் மேற்பட்ட பெண்களை துன்புறுத்தி, உள்ளாடைகளை திருடிச் சென்றதாகவும் மேலும், குறித்த நபர் 20 வயது முதல் 30 வயதிற்கிடைப்பட்ட கவர்ச்சியான பெண்களையே குறிவைத்து இச் செயலில் ஈடுபட்டதாகவும், மேலும் பெண்களின் நகைகள் மற்றும் காலணிகளை திருடியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சுவிஸ் நீதிமன்றம் குறித்த நபர் மீதான குற்றங்களை உறுதிசெய்து, 2 ஆண்டுகள் மற்றும் 8 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அந்த நபரை உளவியல் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.