பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி, சுமார் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நேற்று (12) பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது மக்கள், எதிர்ப்பு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் கறுப்புக் கொடிகளையும் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பூண்டுலோயா, கிகிலியாமான 3ஆம் கட்டை பகுதியிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி டன்சினன் காந்திபுரம், டன்சினன் மத்திய பிரிவு, டன்சினன் கீழ்ப்பிரிவு, சீனன் கீழ்ப்பிரிவு ஊடாக பூண்டுலோயா பஸ் தரிப்பிடத்தை சென்றடைந்தது.
டன்சினன் பாதையின் புனரமைப்புக்காக முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணிக்கு 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்களும் தமது முழு ஆதரவினை வழங்கியிருந்தனர்.
அத்தோடு இந்த பேரணியில் மத குருமாரும் கலந்துகொண்டனர்.
அதேவேளை பூண்டுலோயா நகரங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM