“‘கப்ஜா’ எனும் திரைப்படம், நட்சத்திர நடிகர்களை விட, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் உருவாகி இருக்கிறது” என படத்தின் நாயகனான உபேந்திரா தெரிவித்தார்.
கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கப்ஜா'.
இதில் 'ரியல் ஸ்டார்' உபேந்திரா, கிச்சா சுதீப், சிவராஜ் குமார், ஸ்ரேயா சரண், சுதா, காமராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஏ. ஜே. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். 1945 ஆம் ஆண்டில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்திய இந்த திரைப்படம் மார்ச் 17ஆம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது நடிகை ஸ்ரேயா சரண், மூத்த நடிகை சுதா, இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன், தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். சந்துரு, கதாநாயகன் 'ரியல் ஸ்டார்' உபேந்திரா ஆகியோர் பங்குபற்றினர்.
இதன் போது உபேந்திரா பேசுகையில், “கப்ஜா திரைப்படத்தில் நடிகர்களின் பங்களிப்பை விட ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர் படத்தொகுப்பாளர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு அதிகம். இது அவர்களுக்கான படம். இயக்குநர் ஆர். சந்துரு இயக்கத்தில் இதற்கு முன் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். இது அவருடைய கனவு படைப்பு. இதற்காக நான்காண்டுகள் கடுமையாக உழைத்து, இதனை உருவாக்கி இருக்கிறார். எமக்கும் நேரடியாக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. காலமும் கதையும் சூழலும் பொருந்தி வந்தால் தமிழில் நடிப்பேன். தமிழில் ஒரு படத்தை இயக்கி நடிக்க வேண்டும் என்ற திட்டமும் இருக்கிறது.” என்றார்.
இதனிடையே நடிகர் உபேந்திரா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான 'சத்யம்' எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM