ரணில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாடு அதலபாதாளத்துக்குள் விழுந்திருக்கும் - எம்.ராமேஷ்வரன்

Published By: Nanthini

13 Mar, 2023 | 03:46 PM
image

ணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்காவிட்டால் இந்நாடு அதல பாதாளத்துக்குள் விழுந்திருக்கும். இதனால் எமது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். 

எனவேதான் மக்கள் நலன் கருதியே நாம் ஜனாதிபதியை ஆதரித்தோம். தற்போது அவருக்கு உலக நாடுகள் கைகொடுத்து வருகின்றன. இந்த அரசியலில் ஜீவன் தொண்டமான் பலமான அமைச்சராக இருக்கின்றார். அதன் மூலம் மலையகத்துக்கு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கிடைத்து வருகின்றன என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய தெரிவுசெய்யப்பட்ட தோட்டங்களுக்கு கூடாரங்களும் கதிரைகளும் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இ.தொ.கா தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரனின் தலைமையில் தலவாக்கலை, கொட்டகலை, நுவரெலியா போன்ற பகுதிகளில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் சச்சிதானந்தன், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், அமைப்பாளர்கள்,  தோட்ட தலைவர், தலைவிமார், இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே இ.தொ.கா. தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துரைக்கையில்,

நானும், எமது தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டவர்களும் பிரதேச சபையில் இருந்துதான் மக்கள் பிரதிநிதித்துவ அரசியலை ஆரம்பித்தோம். 

அப்போது மக்கள் தமது பிரச்சினைகளை எம்மிடம் எடுத்துரைப்பார்கள். நாம் எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறி, தேவையான வேலைத்திட்டங்களை பெற்றுக்கொள்வோம். 

இவ்வாறு நாம் மக்கள் சேவையாற்றியதால்தான் எம்மை மாகாண சபை முதல் பாராளுமன்றம் வரை மக்கள் அனுப்பி வைத்தனர்.

எனவே, உங்கள் பகுதி பிரச்சினைகளை எடுத்துக்கூறவும் பிரதிநிதியொருவர் அவசியம். அதனால்தான் இப்பிரதேசத்துக்கு துடிப்பான இளைஞர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். 

எனவே, அவருக்கு ஆதரவளித்து, அவர் மூலம் சேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலமானதொரு ஸ்தாபனமாகும். அதன் பொதுச்செயலாளர் பலமான அமைச்சராக இருக்கின்றார். 

எனவே, எம்மால்தான் மலையகத்துக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும். 

மக்கள் மென்மேலும் ஆணை வழங்கினால் எமது பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கப்படும். அதற்கு இந்த உள்ளாட்சி சபைத் தேர்தலை சிறந்த களமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நாட்டை பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாசவுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். எவரும் முன்வரவில்லை. ரணில் விக்ரமசிங்கதான் அச்சமின்றி பொறுப்பேற்றார். 

தற்போது நாட்டை படிப்படியாக அவர் மீட்டு வருகின்றார். உலக நாடுகள் அவரை ஆதரிக்கின்றன. அவர் நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால் நிலைமை மோசமாக இருந்திருக்கும். 

நாங்களும் மக்கள் பக்கம் நின்று மக்கள் சார்பில் அவரை ஆதரித்தோம். அவரது ஆட்சியில் எமது பொதுச்செயலாளர் அமைச்சராக இருக்கின்றார். பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். 

அண்மையில் கூட உலக வங்கியின் ஆதரவுடன் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் இலவச சத்துணவு திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின்...

2024-05-29 01:44:39
news-image

கண்டியில் பிரபல வர்த்தகர் ஒருவர் 20...

2024-05-29 01:41:06
news-image

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20...

2024-05-29 01:29:28
news-image

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும்...

2024-05-29 01:25:16
news-image

அரசியலமைப்பிற்கமைய ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி...

2024-05-29 01:17:00
news-image

தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது -...

2024-05-29 01:14:15
news-image

தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின்...

2024-05-29 01:07:01
news-image

தேர்தல் ஆணைக்குழுவினருக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி...

2024-05-29 00:12:16
news-image

யாழில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிக்குள் பொதுமக்கள்...

2024-05-28 23:52:36
news-image

கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பில்...

2024-05-28 20:44:18
news-image

சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் பணம் சம்பாதிக்கவே...

2024-05-28 20:32:41
news-image

கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் இருக்கும்...

2024-05-28 20:02:37