எழுத்தாளர் உமா வரதராஜனின் 'எல்லாமும் ஒன்றல்ல' நூல் வெளியீடு

Published By: Ponmalar

13 Mar, 2023 | 03:45 PM
image

இலக்கிய ஆளுமை எழுத்தாளர் உமா வரதராஜன் எழுதிய 'எல்லாமும் ஒன்றல்ல' கட்டுரை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பேராசிரியர் எஸ்.யோகராசா தலைமையில் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நேற்று (12) பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பதிப்பித்து வெளியீட்டு வைத்த இந்நூல் வெளியீட்டு விழாவினை வியூகம் கலை, இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நூலின் வெளியீட்டு உரையினை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் நிகழ்த்தினார்.

நூலின் முதல் பிரதியை தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.குணராசா பெற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சி.எல் பெர்ணாண்டோ நூலுக்கான வாழ்த்துச் செய்தியை வழங்கியிருப்பதோடு, நிகழ்வின்போது கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ், பெண் எழுத்தாளர் டொக்டர் திருமதி.புஷ்பலதா லோகநாதன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர், இலக்கிய விமர்சகர் எழுத்தாளர் மன்சூர் ஏ.காதர், உலக கவிஞர் சோலைக்கிளி, எழுத்தாளர் சபா சபேஷன், வாசுதேவன், சிவ-வரதராஜன், சஞ்சீவி சிவகுமார், பி.சஜிந்ரன் ஆகியோர் இங்கு உரையாற்றினார். நூலாசிரியர் உமா வரதராஜன் நிகழ்வின் இறுதியில் எற்புரையை நிகழ்த்தியதோடு நிகழ்வுகளை கிழக்கு மாகாண இளம் கலைஞர் விருதை பெற்றுக் கொண்ட செல்வி எஸ்.கஜானா தொகுத்து வழங்கினார்.

1976 ஆம் ஆண்டு எழுத்தாளர் உமா வரதராஜன் உயர்தர வகுப்பு மாணவனாக இருக்கும் போது கவிஞர் எம்.ஏ.நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வின் போது தனது முதலாவது விமர்சன உரையை நிகழ்த்தினார். அன்றிலிருந்து இன்று வரை 46 ஆண்டுகள் இலக்கியத் துறையில் பயணித்த பாதைகளில் அவ்வப்போது கட்டுரை வடிவில் எழுதியவைகள், மேடையில் பேசியவைகள், மேடைகளில் எழுதி வாசித்த கட்டுரைகள் என இந்த புத்தகத்தில் 40 கட்டுரைகள் இடம் பிடித்துள்ளன. இதில் மதிப்பீடுகள், நினைத்தல், ஆளுமைகள், அஞ்சலி, விமர்சனம், முன்னுரைகள் என்ற பல பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆய்வாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளரின் குடும்பத்தினர், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02
news-image

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக தழிழர்...

2023-03-28 09:35:23
news-image

எவோட்ஸ் - 2023 சிறுகதைப் போட்டி

2023-03-27 18:50:52
news-image

அகில இலங்கை ஊடக படைப்பாக்க போட்டிகளில்...

2023-03-27 18:34:04
news-image

'ஈழத்து ஞானக்குழந்தை' விருதினை பெற்ற 5...

2023-03-27 18:34:38
news-image

கல்முனை சாஹிராவுக்கு பழைய மாணவ பிரதிநிதிகளால்...

2023-03-27 10:21:07
news-image

சிங்கப்பூரில் 'புரிந்துணர்வு கையொப்பமிடல்' நிகழ்ச்சி

2023-03-25 20:05:14
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய பால்குட...

2023-03-24 17:51:42