எஜமானர் இறந்தது தெரியாமல் 3 மாதமாக காத்திருக்கும் நாய் !

Published By: Digital Desk 5

13 Mar, 2023 | 03:39 PM
image

தமிழகத்தில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தனது எஜமானர் உயிரிழந்தது தெரியாமல் அவர் வளர்த்த நாய் மூன்று மாதமாக வைத்தியசாலைக்கு வெளியே காத்திருக்கும் காட்சி பார்ப்பவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் சேலம் மாவட்ட அரசு மோகன் குமாரமங்கலம் பொது வைத்தியசாலைக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவரை அவருடைய உறவினர்கள் அழைத்து வந்தனர். அப்போது, அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றும் வைத்தியசாலைக்கு வந்துள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், வைத்தியசாலைக்குள் சென்ற தனது எஜமானர் திரும்பி வருவார் என்று நினைத்து அவர் வளர்த்த நாய் மூன்று மாதங்களாக வைத்தியசாலை வாசலில் காத்திருக்கிறது.

வைத்தியசாலையில் பணியில் உள்ள காவலர்கள் அந்த நாயை விரட்டி விட்டாலும், அந்த இடத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே படுத்திருக்கிறது. இந்த நாயின் மீது இரக்கப்பட்டு வைத்தியசாலை ஊழியர்கள் அவ்வப்போது உணவுகள் வழங்கி வருகின்றனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு நோயாளி இறந்ததால், அந்த நாய் யாருடன் வந்தது என்பது தெரியாமல் உள்ளது. இறந்தவரின் உறவினர்களும் நாயை அழைத்துச் செல்ல வரவில்லை.

இதனால் நாள்தோறும் அவசர சிகிச்சைப் பிரிவு முன்பு அமர்ந்து, தன்னை வளர்த்தவர் வருவார் என்று வாசலை பார்த்துக்கொண்டே இருப்பது பார்ப்பவர்களை வேதனை அடைய வைத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எலொன் மக்ஸ்க் திமிர்பிடித்த கோடீஸ்வரர் ;...

2024-04-23 12:18:43
news-image

மோடி மீது சட்ட நடவடிக்கை” -...

2024-04-23 11:50:00
news-image

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 80க்கும் மேற்பட்ட...

2024-04-23 11:21:01
news-image

மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரு...

2024-04-23 10:13:02
news-image

இஸ்ரேல் காசா: இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாயின்...

2024-04-23 09:10:37
news-image

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதல் -...

2024-04-22 15:53:50
news-image

கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்:...

2024-04-22 11:41:18
news-image

‘Visit Saudi’ : சவூதி அரேபியாவில்...

2024-04-22 11:36:41
news-image

 'இஸ்ரேல் நடத்­தி­ய­து' ஒரு தாக்­கு­தலே அல்ல...

2024-04-22 11:19:36
news-image

காசாவின் நாசர் மருத்துவமனைக்குள் 50 உடல்கள்...

2024-04-22 10:36:01
news-image

மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் சீன சார்பு...

2024-04-22 10:34:08
news-image

அமெரிக்க தளங்கள் மீது மீண்டும் தாக்குதல்களை...

2024-04-22 10:18:38