(எம்.மனோசித்ரா)
ஆணைமடு பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் 9,000 மக்களுக்கு தொற்றா நோய் தொடர்பான விசேட மருத்துவ முகாம் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அதற்கமைய ஆரம்ப சுகாதார சேவைகளுக்காக இவ்வாண்டு உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறவுள்ளதாக சுகாதார பராமரிப்பு முறையை வலுப்படுத்துவது தொடர்பான உலக வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆணைமடு வைத்தியசாலையை அண்மித்த 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்காக தொற்றா நோய் ஏற்பட்டுள்ளவர்களை இனங்காண்பதற்காக விசேட மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி ஆணைமடு பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் இந்த மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது.
ஆணைமடு வைத்தியசாலையை அண்மித்து 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 29,000 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 35 வயதிற்கும் அதிகமானோர் 12,400 பேர் காணப்படுகின்றனர்.
35 வயதுக்கு குறைவானவர்களில் 3,000 பேர் இதுவரையில் வைத்தியசாலையினால் வெவ்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது சுகாதார நிலைமை பரிசோதிக்கப்பட்டு தனிப்பட்ட மருத்துவ அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இதுவரையிலும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத 35 வயதுக்கும் அதிகமான 9,000 பேருக்காக இந்த விசேட மருத்துவ முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறையை வலுவூட்டும் உலக வங்கியின் திட்டமானது புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஆணைமடு வைத்தியசாலை ஆகியவற்றுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இது எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஆரம்ப சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான உலக வங்கி திட்டமானது வைத்தியசாலைகள் மற்றும் கிளினிக்குகள் மட்டத்தில் இத்தகைய மருத்துவ சோதனைகளை மேற்கொண்டு ஒரு 198,000 நபர்களின் தகவல்களை டிஜிட்டல் தகவல் கட்டமைப்பில் சேர்க்க முடிந்துள்ளது.
திட்டத்தில் பங்கேற்கும் சுமார் 600 வைத்தியசாலைகளில் சேவைகளைப் பெற ஒதுக்கப்பட்ட மக்கள்தொகையில் 25 சதவீதமானோர் ஒரு வைத்தியசாலையில் பரிசோதனையை நிறைவு செய்ய வேண்டும்.
மேலும், வைத்தியசாலையுடன் இணைந்த சுகாதாரப் பாதுகாப்புக் குழுக்கள் 3 கட்டங்களை நிறைவு செய்ய வேண்டும். அதற்காக இவ்வாண்டு உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறையை வலுப்படுத்துவது தொடர்பான உலக வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM