சிங்கள மொழியியலில் பட்டம்பெற்ற கிழக்கின் முதலாவது ஆசிரியர்

Published By: Ponmalar

13 Mar, 2023 | 12:22 PM
image

களனி பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் ஹமீது நாஸிக் அஹ்மத் என்ற ஆசிரியர் சிங்கள மொழியியல் துறையில் சிங்கள மொழிமூலத்தினூடான முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)  (27) இடம்பெற்ற களனி பல்கலைக்கழகத்தின் 132 ஆவது பட்டமளிப்பு விழாவில் இவர் சிங்கள மொழியியல் துறைக்கான முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

இவர் சிறுவயதிலிருந்தே சிங்கள மொழியைக் கற்பதில் காட்டிய அதீத ஆர்வமே சிங்கள மொழியை ஆழமாகக் கற்று முதுமாணிப்பட்டம் வரை செல்ல வாய்ப்பேற்படுத்தியது.

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர், 2017 ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையின் (SLTS) இரண்டாம் மொழி சிங்கள பாடத்திற்கான ஆசிரியராக கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினூடாக தெரிவு செய்யப்பட்டு, அக்கரைப்பற்று வலயத்தின் பொத்துவில், அல்-கலாம் மகா வித்தியாலயத்தில் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் சிங்களப் பாட ஆசிரியராக சேவையாற்றி பின்னர், இடமாற்றம் பெற்று தற்போது, சம்மாந்துறை வலயத்தின் சது/அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) சிங்களப் பாடத்திற்கான ஆசிரியராக சேவையாற்றுகின்றார்.

மேலும், இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் (SEUSL) பகுதி நேர சிங்கள பாடநெறிக்கான வருகைதரு விரிவுரையாளராகவும், தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) தேசிய வளவாளராகவும், மற்றும் வருகைதரு விரிவுரையாளராகவும் சேவையாற்றுவதோடு, அரச கரும மொழிகள் திணைக்களத்தினதும் (Department of Official Languages), தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினதும் (NILET) அரச ஊழியர்களுக்கான அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான 100, 150 மற்றும் 200 மணித்தியாலங்களைக் கொண்ட பாடநெறிகளுக்கான தேசிய வளவாளராகவும் சேவையாற்றுகின்றார்.

மேலும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) சாய்ந்தமருது இளைஞர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (SLYC) இடம் பெறுகின்ற பகுதி நேர சிங்கள சான்றிதழ் (Certificate in Professional Sinhala) பாடநெறிக்கான வருகைதரு போதனாசிரியராகவும், சாய்ந்தமருது பொலிவேரியனில் அமைந்துள்ள கலாசார நிலையத்தின் பகுதி நேர சிங்கள மொழிக்கான வருகைதரு போதனாசிரியராகவும் சேவையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35