நல்லதன்னி பகுதிக்கு விசேடசேவைக்கு சென்றிருந்த. பொலிஸ் பரிசோதகா் ஒருவா் மது அருந்திவிட்டு சேவை நேரத்தில் பொலிஸ் சீருடையுடன் நல்லதன்னியில் இருந்து மஸ்கெலியா பகுதிக்கு வந்து மதுபோதையில் சத்தம் போட்டு கூச்சல்யிட்டு கொண்டிருந்த பொலிஸ் பரிசோதகா் ஒருவரை மஸ்கெலியா பொலிஸாா் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனா்.

கைது செய்யபட்ட பொலிஸ் பரிசோதகா் அட்டன் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொலிஸ் பரிசோதகா் சிவனொளி பாதமலை பருவகாலத்திற்காக விசேட சேவைக்காக சென்றிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சேவையில் இருந்த குறித்த பொலிஸ் பரிசோதகா் நல்லதன்னி பொலிஸ்நிலை பொறுப்பதிகாரியிடம் அனுமதி பெறாமலும் குறிப்பு புத்தகத்தில் நான் வெளியில் செல்வதாக குறிப்பினை பதிவு செய்யபடவில்லையெனவும் பொலிஸாா்  மேலும் தெரிவித்தனா்.

கைது செய்யபட்ட பொலிஸ் பரிசோதகா் இன்றைய தினம் அட்டன் நீதவான் முன்னிலையில் அஐா் படுத்தபட உள்ளதாக மஸ்கெலியா பொலிஸாா் தெரிவித்தனா்.

சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.