ஊழல் மோசடியற்ற,மக்களால் ஏற்றுக்கொள்ள கூடியவரை ஜனாதிபதி பொலிஸ்மா அதிபராக நியமிப்பார் - மஹிந்த ராஜபக்ஷ

Published By: Digital Desk 3

13 Mar, 2023 | 10:38 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஊழல் மோசடியற்ற,மக்களால் ஏற்றுக்கொள்ள கூடிய சிறந்த ஒருவரை ஜனாதிபதி பொலிஸ்மா அதிபராக நியமிப்பார்,முறையற்றவரை நியமிக்கமாட்டார்,சிறந்த ஒருவரை தெரிவு செய்ய முடியாவிட்டால் தற்போதைய பொலிஸ்மா அதிபரின் பதவியை நீடித்துக் கொள்ளலாம். பொது மக்கள் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மொனராகலை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாங்கள் அமைதியாக இருப்பதையிட்டு அரசியல் கட்சியினர் பொய்களை முன்னிலைப்படுத்தி மக்களை தவறாக வழிநடத்த ஆரம்பித்துள்ளார்கள். இதனால் இனி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.வெல்லஸ மக்கள் என்றும் என்னுடனே இருப்பார்கள்.நேர்மையானவர்கள் ஏமாற்றமடையமாட்டார்கள்.

நாடு என்ற ரீதியில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். அனைத்து சவால்களையும் வெற்றிக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். வரலாற்று ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டோம் என்பதை மறந்து விடக் கூடாது. பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அரசியல் நோக்கமற்ற வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

போராட்டத்தினால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று நினைத்துக் கொண்டு செயற்பட்டால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அரகலயவினால் நாட்டின் கலாசாரம் முழுமையாக சீரழிந்ததை அவதானிக்க முடிந்தது. நாட்டு மக்களின் வலியுறுத்தலுக்கு அமைய பதவிகளில் இருந்து விலகினோம்,போராட்டத்தின் உண்மை நோக்கம் என்ன,அதனை யார் செய்தது என்பதை மக்கள் தற்போது நன்கு அறிந்துக் கொண்டுள்ளார்கள்.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு யாரையாவது பரிந்துரை செய்யுமாறு பலர் என்னிடம் தொலைபேசியில் குறிப்பிடுகிறார்கள். அரசியலமைப்பு பேரவை பொலிஸ்மா அதிபரை நியமிக்க வேண்டும்,சிறந்த ஒருவரை ஜனாதிபதி பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்ய வேண்டும். இல்லாவிடின் தற்போதைய பொலிஸ்மா அதிபரின் பதவியை நீடிக்கலாம்.தவறான ஒருவரை பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி நியமிக்கமாட்டார் என்று எண்ணுகிறேன். சிறந்த நபரை ஜனாதிபதி நியமிப்பார்.

தேர்தலில் வெற்றிப்பெறுவோம் என்பது உறுதியாக இருந்தால் தேர்தலுக்கு அச்சப்பட வேண்டிய தேவை இல்லை. நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். அதனால் தேர்தல் இடம்பெறும் வரை அமைதியாக உள்ளோம்.தேர்தல் நிச்சயம் பெற்றிப் பெறுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடியில் சந்தேகத்தில் கைதான 30 பேரும்...

2024-03-02 01:12:34
news-image

மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது...

2024-03-02 00:04:10
news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58