நிலைபேண்தகு அபிவிருத்திக்காக முறைகேடான பொலித்தீன் பாவனையை குறைத்தலும் இலங்கையின் சட்டபூர்வமான முன்னெடுப்பும்

13 Mar, 2023 | 12:50 PM
image

நிகழ்காலம் என்பது இறந்தகாலத்தில் இருந்து எமக்கு மரபுரிமையானதொன்றல்ல என்பதோடு எதிர்காலத்தில் இருந்து கடனாகப்பெற்ற ஒன்றாகுமென அன்று செவ்விந்தியத் தலைவர் சியெட்டல் முக்காலமும் அறிந்த தலைவரென்றவகையிலேயே கூறினார். 

1987 புறூட்லண்ட் அறிக்கையின் பிரகாரம் உலக நாடுகள் பொருளாதார, அபிவிருத்தி நோக்கங்களை அடைகையில் போதுமான அளவில் சுற்றாடலில் உள்ள வளங்கள் பற்றிச் சிந்திப்பதில்லை எனவும் அதனால் வெகுவிரைவில் புவி உயிர்வாழ்க்கையானது உயிர்வாழப் பொருத்தமற்ற மட்டத்தை அடையுமெனவும் இனங்காணப்பட்டுள்ளது. அதனாலேயே நிலைபெறுதகு அபிவிருத்தி எமக்கு தேவைப்படுகின்றது.

செழிப்பான நிலத்தைப்போன்றே நீலநிற உள்நாட்டு நீரப்பரப்பிற்கும் நீலநிற வான் பரப்பிற்கும் உரிமை பாராட்டுகின்ற இலங்கை ஒரு காலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆசியாவில் மிகச்சிறந்த நாடு எனவும் மற்றுமொரு காலத்தில் பாதுகாப்பற்ற, மிகவும் பயங்கரமான, உயிர்வாழப் பொருத்தமற்ற நாடு எனவும் இனங்காணப்படுதலுக்கு இலக்காகி ஒவ்வொரு காலகட்டத்திலும் உரிமை பாராட்டுகின்ற சுற்றாடல் நிலைமைகளுக்கு இணையாகவேபெயர்சூட்டப்படுதலுக்கு இலக்காகியது. 

உயிர்வாழ்வதற்கான உரிமை நியதிச்சட்டமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிராவிடினும் மறைமுகமாக சாதகமான சூழலில் வசிப்பதற்கான உரிமை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்மைக்கால வரலாற்றில் உலகம் பூராவிலும் இடம்பெற்றுள்ள சுற்றாடல் அனர்த்தங்கள் இவ்வளவுதான் எனக் கூறமுடியாதுள்ளது. 

உலகம் பூராவிலும் பிரபல்யமடைந்துள்ள பிளாஸ்ரிக் கடல்கள் அதற்கான தக்க உதாரணமாகும். இலங்கையை எடுத்துக்கொண்டால் அயலிலுள்ள இராச்சியங்களின் செயற்பாடுகளுக்கு அகப்பட்டு ஒரு கட்டத்தில் வளி மாசுபாட்டினாலும் மற்றுமொரு கட்டத்தில் குப்பைகூள அப்புறப்படுத்தல் நிலப்பகுதியாகவும் மாறி சுற்றாடல் விபரீதங்களை அனுபவிக்க நேர்ந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். எத்தகைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளின் மத்தியிலும் சாதகமான சுற்றுச்சூழலை பேணிவரவேண்டிய தேவை இலங்கையரைச் சார்ந்ததாகும். 

அதற்கு அவசியமான சட்டங்களை ஆக்குதல், அமுலுக்கு கொண்டுவருதல், நடைமுறைப்படுத்தலிலான குறைபாடுகளை பரீட்சித்தல் போன்றே முழுமையாக நன்மைபயக்கக்கூடிய நிலைபெறுதகு எதிர்காலத்திற்காக தன்னை அர்ப்பணிக்க இலங்கை தயாராகி உள்ளது.

திறந்த பொருளாதாரத்தின் ஆரம்பத்துடன் வயதில் குறைந்த, வயது முதிர்ந்த அனைவருக்கும் திறந்துவிடப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தின் கதவுகள் மனித உயிரினத்தை முதன்மையாகக்கொண்ட ஒற்றைக்கல உயிரினம்வரை அன்றுதொட்டு இற்றைவரை புரிந்துள்ள தாக்கம் அளப்பரியதாகும். வசதியானதும் எளிமையானதுமான வாழ்க்கைப் பாங்கினை அமைத்துக்கொள்வதற்காக இயற்கையைப் போன்றே பொதுவான மற்றும் பிரத்தியேக உருப்படிகளைப் போன்றே விருப்பு வெறுப்புக்களையும் சந்தைப்படுத்த மனிதன் தூண்டப்பட்டுள்ளான்.

தாய் வயிற்றிலிருந்து உலகத்தைக் காண்கின்ற குழந்தை ஆறு மாதங்கள் கழிந்தபின்னர் போசாக்கினைப் பெறுகின்ற பால் போத்தலில் இருந்து உயிர்பிரிய நெருக்கிக்கொண்டிருக்கும் நோயாளிக்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சைகள், மருந்து பொதியிடல்கள், சேலயின் மாத்திரமன்றி குருதிப் பக்கெற்றுகள் ஆகிய அனைத்தினதும் உறைகள் பிளாஸ்ரிக்கை மூலப்பொருளாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இலங்கையின் கடற்பரப்பிற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தி மௌனமாகிய X-Press Pearl கப்பலிலிருந்து வெளியேறிய தொன் கணக்கான பிளாஸ்ரிக் துகள்கள் உலகம் பூராவிலும் பிளாஸ்ரிக் பாவனையின் போக்கு எத்தகையது என்பதற்கான உதாரணமாகும்.

பிளாஸ்ரிக் என்பது “அவசியமான விதத்தில் அவசியமான இடத்தில் வடிவத்தை மாற்றிக்கொள்ள கூடிய இயலுமை படைத்த“ எனும் பொருள் பொதிந்த “plasticity’’ என்பதாகும். 

சூடாக்குவதன் மூலமாக பாகு நிலைக்கு மாற்றப்படுவதற்கான ஆற்றல்படைத்த பிளாஸ்ரிக் இன்றளவில் முழுஉலகத்தையும் அகப்படுத்தி முடித்துவிட்டது. உலகில் உள்ள சமுத்திரங்கள், கடல்களை முதன்மையாகக்கொண்ட நீர்ப்பகுதிகளைப் போன்றே கபில நிறமுடைய மண் பரப்பும் கண்களால் காணமுடியாத ஒட்சிசனை முதன்மையாகக்கொண்ட வளி மண்டலமும் பிளாஸ்ரிக்கின் பிடியில் சிக்கிவிட்டது.

பொலித்தீன் பிளாஸ்ரிக் உயிராபத்து விளைவிக்கக்கூடியதெனக் கருதி ஒதுக்கித்தள்ளுவதற்கான இயலுமை இன்று எம்மிடம் இல்லை. உலகில் வசிக்கின்ற ஒரு மனிதனுக்காக அண்ணளவாக வருடமொன்றுக்கு ஏறக்குறைய 50kg பிளாஸ்ரிக் உற்பத்தியாவதாகவும் அது ஒவ்வொரு 10 வருடங்களுக்கொருதடவையும் இருமடங்காகின்றதெனவும் ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டளவில் உலகளாவிய பிளாஸ்ரிக் உற்பத்தி ஏறக்குறைய 367 மில்லியன் மெட்றிக் தொன்களாகவும் அமைந்துள்ளது. மனிதன் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீனுடன் இணைபிரியாத பிணைப்பிற்கு எவ்வளவு கட்டுப்பட்டுள்ளான் என்பது இதன் மூலமாக தெளிவாகின்றது. 

எம்மால் தூரநோக்கின்றி முறைதகாதவகையில் பாவிக்கப்படுகின்ற, அப்புறப்படுத்தப்படுகின்ற மற்றும் அப்புறப்படுத்தல் விதிமுறைகளின் மத்தியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் 100% எம்மீது தாக்கமேற்படுத்தி உள்ளது. இந்த நிலைமை மனிதனை முதன்மையாகக்கொண்ட உயிருள்ள, உயிரற்ற ஒட்டுமொத்த சுற்றாடல்மீது பெற்றுக்கொடுக்கின்ற தலைவிதி துன்பகரமானதாகும். 

அன்றாட தனிப்பட்ட அல்லது பொதுச் செயற்பாடுகளின்போது மறைமுகமாக கூறப்படுகின்ற சுற்றாடல் கிரயம் பற்றிப் பொருட்படுத்தாமல் அபிவிருத்தியை முதன்மையாகக் கொண்டதன் மத்தியில் உயிர்வாழப் பொருத்தமான சுற்றாடல்சார் தகுதி எமது கைகளிலிருந்து நழுவிச் செல்லும். இலங்கை ஒருசில சுற்றாடல் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் நிறைவேற்றி அமுலாக்குவதன் மூலமாக தொடர்ந்தும் மேற்சொன்ன உயிர்வாழ்வதற்கான தகைமையை தக்கவைத்துக் கொள்வதும் அதனூடக நிலைபெறுதகு அபிவிருத்தியின்பால் பயணிப்பதையுமே எதிர்பார்க்கின்றது. அதன்பொருட்டு முறைதகாத பாவனையைக் குறைத்து நிலைபெறுதகு நோக்கங்களை அடைவது 2007 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சிரமமானதாக அமைந்தபோதிலும் கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமையிலும் நேரடியான பங்களிப்புடனும் சுற்றாடல் அமைச்சின் இணையான ஒத்துழைப்புடன் தனித்துவமான பல சட்டங்கள் அமுலாக்கப்பட்டன.

அதற்கிணங்க தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளப்படுகின்ற பிளாஸ்ரிக் பொலித்தீன் அப்புறப்படுத்தலால் சம்பந்தப்பட்ட நிலப்பரப்பினைப்போன்றே அதனோடு தொடர்புடைய ஏனைய சுற்றாடல் காரணிகளும் மண், நீர் மற்றும் வளி ஆகிய மூவகை சந்தர்ப்பங்களும் நிச்சயமாக சேதமடையும்.

அதற்கிணங்க இதிலிருந்து விடுபட 2017 செப்டம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் இலங்கையில், 

 உள்நாட்டுப் பாவனைக்காக 20 மைக்ரோன் தடிப்பமுடைய அல்லது அதைவிடக் குறைவான பொலித்தீன் அல்லது ஏதேனும் பொலித்தீன் உற்பத்தியை விற்பனை, காட்சிப்படுத்துதல், இலவசமாக வழங்குதல் அல்லது பாவனையும்

 உள்நாட்டுப் பாவனைக்கான பொலித்தீன் வகைகளை மூலப்பொருட்களாகக்கொண்டு லன்ச்ஷீட் உற்பத்தி செய்தல், அவற்றை விற்பனை செய்தல், காட்சிப்படுத்துதல், அன்பளிப்பு அல்லது இலவசமாக வழங்குதலும்

 அதிக தடிப்பம்கொண்ட பொலித்தீன் (HDPE) மூலப்பொருளாக பாவிக்கப்படுகின்ற அனைத்துவிதமான சிலிசிலி பேக் வகைகள் மற்றும் குறோசரி பை வகைகளை நாட்டில் உற்பத்தி செய்தல், அவற்றை விற்பனை செய்தல், காட்சிப்படுத்துதல், அன்பளிப்பு அல்லது இலவசமாக வழங்குதலும் 

 உள்நாட்டுப் பாவனைக்காக விரிவாக்கப்பட்ட பொலியஸ்டயரினை மூலப்பொருளாகப் பாவித்து உணவுப் பெட்டிகளை (Regiform Lunch Boxes) உற்பத்தி செய்தல், அவற்றை விற்பனை செய்தல், காட்சிப்படுத்துதல், அன்பளிப்பு அல்லது இலவசமாக வழங்குதலும்

 எந்தவோர் நபரும் பிளாஸ்ரிக் அடங்கிய குப்பைகள் அல்லது எளிதில் எரியக்கூடிய வேறு பிளாஸ்ரிக் அடங்கிய பொருட்களை திறந்தவெளியில் தகனம்செய்தல், தகனம்செய்வித்தல், இடமளித்தல் அல்லது அனுமதி வழங்குதலும்

 அனைத்துவிதமான பொலிஎத்திலீன், பொலிபுறொப்பிலீன், பொலிஎத்திலீன் உற்பத்திகள் அல்லது பொலிபுறொப்பிலீன் உற்பத்திகள் அரசியல், சமூக, சமய, தேசிய, கலாசார அல்லது வேறு ஏதேனும் விழாக்கள் அல்லது சந்தர்ப்பங்களில் அலங்கரிப்பிற்காக பாவிக்கப்படுதலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் பாடசாலை செல்கின்ற சிறிய பிள்ளைக்குக்கூட லன்ச்ஷீட் பாவனையிலிருந்து விடுபட்டு சாப்பாட்டுப் பெட்டி அல்லது மாற்று உற்பத்தியாக வாழை இலையைப் பாவித்தல் போன்ற ஆரோக்கியமான சுற்றாடல் நேயமுள்ள பழங்கங்களின்பால் தூண்டுதலே இதன் மூலமாக எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் சுற்றாடல் நேயமற்ற உற்பத்திகளுக்கு தூண்டுதலளிப்பதற்குப் பதிலாக சுற்றாடல் நேயமுள்ள உற்பத்திகளின்பால் சாதகமான தூண்டுதலை அளிப்பதன் மூலமாக இறந்தகாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு உரித்தாகக்கிடைத்த சாதகமான சுற்றாடலை எதிர்காலத்தை உரித்தாக்கிக் கொடுப்பதாகும். 

இந்த நிலைமையின் மத்தியில் நிலைபெறுதகு அபிவிருத்தியின்பால் பிரவேசிப்பதும் அதனை சட்டமுறையாக அமுலாக்கச் செய்விப்பதும் ஈடேறுதல் திட்டவட்டமானதாக அமையும். பிளாஸ்ரிக் தகனத்தின்போது பிறப்பிக்கப்படுகின்ற டயொக்சின், பியூரன் போன்ற நீண்டகாலம் நிலவக்கூடிய காபன்சார்ந்த மாசுபாட்டுக் காரணிகளை உட்சுவாசிப்பதன் மூலமாக ஆயுட்காலத்தை சுருக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கேதுவாக மனிதனை தூண்டுவதற்கும் அதன் மூலமாக மறைமுகமான தாக்கம் ஏற்படுமெனவும் நிச்சயித்துக்கொள்ள முடியும்.  

திறந்தவெளியில் எரித்தல் அல்லது அது சார்ந்த செயற்பாங்கில் என்னதான் சட்டத்தை மதிக்கின்ற ஆளாகவிருப்பினும் பிறரது தவறு காரணமாக அனுபவிக்க நேரிடுகின்ற பெறுபேறுகள் கவலைக்குரியனவாகும். அன்றுதொட்டு இன்றுவரை பரவலாக காணக்கிடைக்கின்ற அரசியல் கூட்டங்களை முதன்மையாகக்கொண்ட வைபவத் தருணங்களுக்காக பொலித்தீன் பாவனையைக் குறைத்து அதன் மூலமாக புதிய அலையை பிறப்பிக்கவும் இதன் மூலமாக இயலுமாயிற்று.

உண்மையிலேயே மேற்சொன்ன சுற்றுச்சூழலை 2017 முடிவடைகையில் ஒருசில அரசியல் கட்சிகள் அமுலாக்கிக் கொண்டிருந்தமை மகிழ்ச்சி தருகின்றது.

சுற்றாடல் பேணலில் இத்தகைய பல்வேறு மட்டுப்படுத்தல்களை அடைந்துகொள்ள 2021 ஆம் ஆண்டிலும் எமக்கு இயலுமை கிடைத்தது. சுற்றாடலுக்கும் மனிதனுக்கும் இடையிலான பிரிக்கமுடியாத பிணைப்பின் மத்தியில் எமக்கு மரபுரிமையான சுற்றாடலை எதிர்காலச் சந்தியினருக்கு அவ்விதமே உரித்தாக்கி கொடுப்பதன் மூலமாக சுற்றாடல் எம்மைக் காத்திடும், நாங்களும் சுற்றாடலை சிறப்பாக பாதுகாத்திட வேண்டும்.

2021 மார்ச்சு 31 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரத்தக்கதாக இலங்கையில், ஏதேனும் செய்முறை, வியாபாரம் அல்லது கைத்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் விவசாய இரசாயனப் பொருட்களை பொதயிடுவதற்கான பொலிஎதிலீன் டெரெப்தலேட் (PET) அல்லது பொலிவைனைல் குளோரைட்டு (PVC) பொருட்கள்; அத்துடன் ஏதேனும் செய்முறை, வியாபாரம் அல்லது கைத்தொழிலுக்காக இதன்கீழ் குறித்துரைக்கப்பட்ட எதேனும் பிளாஸ்ரிக் பொருள், 

 20மி.மீ. தேறிய கொள்ளவிற்கு/ 20 கிராம் தேறிய நிறைக்குக் குறைவான அல்லது அதற்குச்  சமமான சிறு பைகள் (Sachet) (உணவு மற்றும் மருந்துகளைப் பொதியிடுவது தவிர்ந்த);

 காற்றடைக்கப்படக்கூடிய விளையாட்டுப் பொருட்கள் (பலூன்கள், பந்துகள், நீரில்  மிதக்கக்கூடய/ நீரில் விளையாடக்கூடிய விளையாட்டுப் பொருட்கள் மற்றும் நீர் விளையாட்டுத் துணைப்பொறிகள் தவிர);

 பிளாஸ்டிக் காம்புடனான (Stem) கொட்டன் பட்ஸ் (Cotton buds) (மருத்துவ / நோய் அறிகுறிசார்ந்த சிகிச்சைக்குப் பயன்படும் பிளாஸ்டிக் கொட்டன் பட்ஸ் தவிர), பாவிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. அதனூடாக எதிர்பார்த்த அடிப்படை நோக்கமாக அமைந்தது யாதெனில் இயற்கை மற்றும் செயற்கையான நீர்மூலங்கள் போன்றே நீர்த்தேக்கங்கள் பொலித்தீன் பிளாஸ்ரிக்கை கையுதிர்க்கின்ற மையங்களாக மாறுவதை தடுப்பதாகும். நீண்டகால வெளிக்கள அவதானிப்புகள் மற்றும் ஆய்வுகள் மூலமாக ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் குளங்கள் போன்ற பொதுப்பாவனை இடம்பெறுகின்ற இடங்களில் குறிப்பாக கிராமியரீதியாக எடுத்துக்கொண்டால் பாவனையின் பின்னர் முறைப்படி கையுதிர்க்காத செஷே பக்கெற்றுகள், பிளாஸ்ரிக் பற்தூரிகைகள் போன்றவை பரவலாக காணப்படுகின்றனவென்பது இனங்காணப்பட்டது.

அதைப்போலவே விவசாய நடவடிக்கைகளைச் சார்ந்த பயிர்நிலங்களில் பாவனைக்குப் பின்னர் முறையற்றவகையில் கையுதிர்க்கின்ற இரசாயன கொள்கலன்கள் பரவலாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. தனிப்பாவனை பிளாஸ்ரிக்கின் முறைதகாத பாவனையை குறைப்பதற்காக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக 2021.03.31 ஆந் திகதி தொடக்கம் அமுலுக்கு வந்த PET மற்றும் PVC பாவனை மட்டுப்பாட்டுடன் இந்த நிலைமை குறைவடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டது. கடல்நீர்த் தொகுதியில் உயிரினங்களுக்கு சேதமேற்படுத்துகின்ற சாதனமான பிளாஸ்ரிக் காம்புகளைக்கொண்ட கொட்டன் பட்ஸ் பாவனை இன்றளவில் முற்றாகவே நிறுத்தப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

சட்டத்தை விதிப்பது இன்றைய தினத்திற்கு மாத்திரமல்ல. அது சந்தேகமின்றி நாளைய தினத்தில் தொடங்குகின்ற எதிர்காலத்திற்கும் நலமான முன்னறிகுறியை தயாரிப்பதாகும். நிலைபெறுதகு அபிவிருத்தி நோக்கங்களை ஈடேற்றிக்கொள்கையில் பாரிய உறுதுணையை வழங்கவும் வாதமின்றி முன்மாதிரியாக சரியான வழியைக் காட்டவும் சுற்றாடல் விடயத்துறையில் எமக்கு இயலுமை கிடைத்துள்ளமை மாபெரும் வெற்றியாகும்.

பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பு வகித்தல் தொடர்பில் அர்ப்பணிப்பதற்காக உலகின் ஏனைய நாடுகள் சுற்றாடலுக்கு எவ்வாறு முதன்மைத்தானம் வழங்குகின்றனவோ இலங்கையும் அதற்கு இணையானதாக ஏதேனுமொரு படிமுறையில் முன்நோக்கி நகர மேற்கொள்கின்ற பிரயத்தனம் பாராட்டத்தக்கதாகும். 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கமுடைய தேசிய சுற்றாடல் சட்டத்தினால் சட்டமுறையான அதிகாரத்தைப் பெறுகின்ற இலங்கையில் சுற்றாடலைப் பாதுகாப்பதிலும் முன்னேற்றுவதிலும் முதன்மை நிறுவனமொன்றாக இயங்கிவருகின்ற மத்திய சுற்றாடல் அதிகாரசபை தனது சாத்தியவளத்தை உச்ச அளவில் பாவிக்கின்ற தருணமாக இந்த சட்டமுறையான முன்னெடுப்பினை சுட்டிக்காட்ட முடியும். 

அதற்காக மிகவும் கிட்டிய உதாரணமாக அமைந்தது 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து அமுலுக்கு வரத்தக்கதாக பல பிளாஸ்ரிக் உற்பத்திகளின் இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி, விற்பனை மற்றும் உள்நாட்டுப் பாவனையைத் தடைசெய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டமையாகும். பல்வேறு தனிப்பாவனை பிளாஸ்ரிக், பொலித்தீன் உற்பத்திகள் அதன்கீழ் தடைசெய்யப்பட உள்ளன. அதற்கிணங்க,

 தனிப்பாவனை பிளாஸ்ரிக் பானக் குழாய்கள் மற்றும் கலத்தல் சாதனங்கள்

 தனிப்பாவனை பிளாஸ்ரிக் பானக் கோப்பைகள், பீங்கான்கள், பிளாஸ்ரிக் யோகற் கரண்டிகள், பிற பிளாஸ்ரிக் கண்டிகளும் முள்ளுக் கரண்டிகளும்

 பிளாஸ்ரிக் மலர்மாலைகள்

 பிளாஸ்ரிக் இடியப்ப தட்டுகள்

என்பவை இவ்விதமாக தடைக்கு இலக்காகிய பொருட்கள் மத்தியில் முதன்மை வகிக்கின்றன. உண்மையாகவே தேசிய அரும்பணியின் முன்னோடியாக அமைந்தே மத்திய சுற்றாடல் அதிகாரசபை இவ்வாறான சுற்றாடல் பெறுமதிவாய்ந்த தீர்மானங்களின்பால் நாட்டஞ்செலுத்தி வருகின்றது. அதனாலேயே எதிர்காலத்தில் பாவனைக்குப் பிந்திய பிளாஸ்ரிக் பொதியிடல் முகாமைத்துவத்திற்காக “உற்பத்தியாளரின் விரிவான பொறுப்பு வகித்தல் பிரமாணங்கள்“ என்பதை வெளியிட மத்திய சுற்றாடல் அதிகாரசபை முயற்சி செய்கின்றது. ஏதேனும் பிளாஸ்ரிக் பொதியிடலை உற்பத்தி செய்கின்ற உற்பத்தியாளர் சம்பந்தப்பட்ட பொதியிடலை மீள்சுழற்றி செய்வதற்கான முறையியலைத் தயாரித்து அமுலாக்கவேண்டியமை இதன் தனித்துவமாகும்.

அந்த முறையியலுடன் முனைப்பாக அமைந்தொழுகுதல் பாவனையாளர் கொண்டுள்ள பொறுப்பாகும். அதன் மூலமாக உற்பத்தியாளரின் விரிவான பொறுப்பினை பயனுறுதிமிக்கதாக சமூகமயப்படுத்துவதற்கான வாய்ப்புவழிவகை உரித்தாகும். மேற்சொன்ன முறையியலில் பாவனைக்குப் பிந்திய பிளாஸ்ரிக் பொதியிடல்களை சரியான முறையியல்களுக்கு அமைவாக மீள்சுழற்சி செய்வதன் மூலமாக பொலித்தீன் பிளாஸ்ரிக்கை குப்பைகூளங்களாக சுற்றாடலில் விடுவிப்பதை தடுக்கமுடியும். சம்பந்தப்பட்ட மூலப்பொருட்களை வேறு உற்பத்திகளை செய்வதற்காக பாவிப்பதன் மூலமாக நிலைபெறுதகு அபிவிருத்திச் செயற்பாங்கிற்கு பலம்சேர்க்க இயலுமானமை சிறப்பம்சமாகும். 

இலங்கையில் அரசு மாத்திரமன்றி தனியார் நிறுவனங்களும் இன்றளவில் அதன்பொருட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதும் பாவனையாளர் சமுதாயம் என்றவகையில் சாதாரண மக்கள் இந்த பணிகளுக்காக ஆக்கமுறையான பிரதிபலிப்புகளை வழங்கிக்கொண்டிருப்பதும் உண்மையாகவே சாதகமான சுற்றாடலொன்றின் மரபுரிமையை பெறுகின்ற பாக்கியத்தை எதிர்காலச் சந்ததிக்கு உருவாக்கிக் கொடுப்பதாக அமையும். சாதாரண மனித வாழ்க்கையில் இருந்து முற்றாகவே கையுதிர்க்கமுடியாத பொலித்தீன் பிளாஸ்ரிக்கின் முறைகேடான பாவனையை குறைப்பதும் அதனை சட்ட முன்னெடுப்பு மூலமாக அடைந்து கொள்வதும் ஊடாக இலங்கையர் என்றவகையில் சந்தேகமின்றி நிலைபெறுதகு அபிவிருத்தியை எம்மால் அடையக்கூடியதாக அமையும்.

சட்டத்தரணி சசித்ரா கே. ஹெட்டிஆரச்சி

சுற்றாடல் உத்தியோகத்தர் சுற்றாடல் மேம்பாட்டு அலகு

மத்திய சுற்றாடல் அதிகார சபை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22