ஹீமோப்டிசிஸ் எனும் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை

Published By: Ponmalar

11 Mar, 2023 | 01:10 PM
image

இன்ஃபுளுயன்சா வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள்.. இதன் அறிகுறிகள்.

இதற்கு தொடக்க நிலையில் சிகிச்சைகளை பெற்றால், இதிலிருந்து முழுமையான நிவாரணம் பெற முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் இருமும் போதோ அல்லது சளியுடன் கூடிய இருமல் ஏற்படும்போது, சளியுடன் ரத்தம் வெளியேறினாலோ.. அதனை மருத்துவ நிபுணர்கள் ஹீமோப்டிசிஸ் பாதிப்பு என வகைப்படுத்துகிறார்கள்.

இத்தகைய பாதிப்பு வைரஸ் தொற்று காரணமாகவும் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவும் ஏற்படக்கூடும். நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது சுவாசப் பாதையில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலோ.. காச நோய், இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலோ.. இத்தகைய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக இருமல் தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்திருந்தாலோ அல்லது உங்களது நீங்கள் இருமும் போது துப்பும் சளியில் ரத்தம் சிறிதளவு கலந்திருந்தாலோ.. இருமும் போது மார்பக வலி, காய்ச்சல், மூச்சு திணறல் இவைகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

இதன்போது மருத்துவர்கள் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, சிறுநீர் பரிசோதனை, நுரையீரல் மற்றும் சுவாசப் பாதையின் இயங்குதிறன் பரிசோதனை, ரத்த நாளங்களின் ஆரோக்கியம் குறித்த பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றை பரிந்துரைப்பர்.

இத்தகைய பரிசோதனையின் முடிவின் மருத்துவர்கள் முதன்மையான மற்றும் முழுமையான நிவாரண சிகிச்சையை வழங்குவர். மிக சிலருக்கு சுவாச பாதையில் அல்லது நுரையீரலில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த கசிவு ஏற்பட்டிருந்தால், அதனை பின்ஹோல் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

டொக்டர் சந்தோஷ் குமார்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்த நாள பாதிப்பிற்குரிய காரணங்கள் என்ன?

2024-05-28 15:34:49
news-image

எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை...

2024-05-27 16:02:28
news-image

மெனிங்கியோமா எனும் மூளையில் வளரும் கட்டி...

2024-05-24 17:46:17
news-image

வயிற்றில் நீர் கோர்ப்பு எனும் பாதிப்பிற்கு...

2024-05-23 16:37:56
news-image

இரத்த வாந்தி எனும் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2024-05-22 15:58:35
news-image

மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-21 17:47:40
news-image

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-20 17:31:58
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு மரபணு பரிசோதனை அவசியமா.?

2024-05-18 18:08:06
news-image

கில்லன் - பாரே சிண்ட்ரோம் எனும்...

2024-05-17 18:20:50
news-image

இலங்கையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்த...

2024-05-17 15:51:49
news-image

முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் நரம்புகளின்...

2024-05-16 17:36:07
news-image

சுருள் சிரை நரம்பு பாதிப்பிற்கு நிவாரணம்...

2024-05-14 20:55:21