(நா.தனுஜா)
பல்துறைசார்ந்த வர்த்தகர்கள் மற்றும் தனியார்துறையினர் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், அவர்களின் கடன்மீள்செலுத்துகை செயன்முறையை இலகுபடுத்தும் நோக்கில் மேலதிக சலுகைகளை வழங்குமாறு நிதியியல் கட்டமைப்புக்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தாம் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதில் வர்த்தகர்கள் மற்றும் பல்துறைசார்ந்தோர் பலதரப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், புதிதாக வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பில் மத்திய வங்கி மேலும் கூறியிருப்பதாவது:
கொவிட் - 19 வைரஸ் பரவல் மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட பேரண்டப் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிதியியல் நிறுவனங்கள் ஊடாக நீடிக்கப்பட்ட மீள்கொடுப்பனவுக்காலம், சலுகை வட்டிவீதங்கள், தொழிற்படு மூலதனக்கடன்கள், படுகடனை காலந்தாழ்த்திச்செலுத்தும் வசதி மற்றும் கொடுகடன் வசதிகளை மறுசீரமைத்தல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு கடன் சலுகைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.
இச்சலுகைகள் மூலம் சுற்றுலாத்துறை, ஆடையுற்பத்தி, பெருந்தோட்டக்கைத்தொழில், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, தனியார்துறை என்பன உள்ளடங்கலாகப் பல்தரப்பட்ட துறை சார்ந்தோர் பெரிதும் பயனடைந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் கொவிட் - 19 வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட வங்கித்தொழிற்துறை மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனத்துறை என்பனவற்றைச்சேர்ந்த கடன்பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட கடனைக் காலந்தாழ்த்திச்செலுத்தும் வசதி முறையே 31.03.2022 மற்றும் 30.06.2022 இல் முடிவுற்றது.
அதேவேளை தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளுக்குப் புத்துயிரளிக்கும் நோக்கில், கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட, மந்தகதியில் செயலாற்றுகின்ற அல்லது செயலாற்றம் அற்ற கடன்பெறுநர்களை அடையாளங்கண்டு உதவுவதற்காக 'கொவிட் - 19 இற்குப் பிந்திய புத்துயிரளித்தல் பிரிவுகளை' உருவாக்குமாறு நிதியியல் நிறுவனங்களிடம் மத்திய வங்கி கோரியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடன் மீள்செலுத்துகை சலுகைக்காலம் முடிவடைந்ததையடுத்து, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடன்களை மீளச்செலுத்துவதில் காணப்படும் சவால்களை உரியவாறு கையாளும் நோக்கில் பல்வேறு துறைசார்ந்த கடன்பெறுநர்கள் மேலதிக கடன் சலுகைக்காலத்தை வழங்குமாறு கடந்த ஜனவரி மாதம் மத்திய வங்கியிடமும், அரசாங்கத்திடமும் கோரிக்கைவிடுத்திருந்தனர்.
அதற்கமைய அவர்களின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் வருமான மார்க்கங்களுக்குப் புத்துயிரளிப்பதுடன் நிதியியல்துறை மீதான மிகையான அழுத்தத்தைத் தடுக்கும் நோக்கில் கொடுகடன் வசதிகளுக்கான சலுகைகள், அறவீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்தல், கொடுகடன் வசதிகளை முன்கூட்டியே தீர்ப்பனவு செய்தல் ஆகியவற்றில் பொருத்தமான சலுகைகளைக் கடன்பெறுநர்களுக்கு வழங்குமாறு மத்திய வங்கி நிதியியல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதன்மூலம் கடன்பெறுநர்களால் வருமானம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் எனவும், கடன்களின் மீள்கொடுப்பனவைப் படிப்படியாகத் தொடங்கமுடியும் எனவும் மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது.
அதேபோன்று இச்சலுகைகள் தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு, அவசியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன் உரிய நிதியியல் நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு கடன்பெறுநர்களிடம் வலியுறுத்தப்படுகின்றது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM