பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது ஏற்புடையதல்ல - வாசு

Published By: Digital Desk 5

11 Mar, 2023 | 12:35 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற  உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிடும் ஆளும் தரப்பினர் நாட்டு மக்களின் சிறப்புரிமையை  மீறியுள்ளமை பாரதூரமான விடயமாகும்.

பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும்  இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் ஜனாதிபதி செயற்படுவது வெறுக்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இடதுசாரி ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படுமா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

தேர்தலை நடத்துவது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பாரிய தடைகளை ஏற்படுத்துகிறது.

தடைகளை உயர்நீதிமன்றம் நீக்கும் போது ஆளும் தரப்பினர் பாராளுமன்ற சிறப்புரிமை என்பதை குறிப்பிட்டுக் கொண்டு உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை தற்போது சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பை திறைசேரி இடைநிறுத்தியுள்ளதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவை ஆளும் தரப்பினர் தற்போது சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இந்த விவகாரம் தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கும் வரை இடைக்கால தடையுத்தரவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்தும் அறிவித்தல் ஒன்றை பிறப்பிக்குமாறு ஆளும் தரப்பின் உறுப்பினர், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை தடுக்கும் வகையில் தான் இந்த சிறப்புரிமை மீறல் பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிடும் ஆளும் தரப்பினர் நாட்டு மக்களின் வாக்குரிமை என்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.

பாராளுமன்ற சிறப்புரிமை என்பதை குறிப்பிட்டுக் கொண்டு சட்டவாக்கத்துக்கும் , நீதித்துறைக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் நிறைவேற்றுத்துறை தற்போது செயற்படுகிறது.நாட்டில் சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08