(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும். அந்த நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் முன்னணி இருக்கிறது. என்றாலும் இந்த தேர்தலை விட மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கே தேர்தல் ஆணைக்குழு முன்னுரிமை வழங்க வேண்டும் .
அத்துடன் பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக திணிக்கப்பட்டு வரும் பாரபட்சம் இல்லாதொழிக்கப்படவேண்டும் என இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. என்னை பொறுத்தவரையில்,
இந்த தேர்தல் நடத்தப்படவேண்டும். ஜனநாயக நாட்டில் தேர்தல் நடத்தப்படவேண்டும். அதனால்தான் எமது மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி மன்றங்களில் எனது தலைமையில் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல் செய்தது.உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இன்னும் முடிவடையவில்லை.
ஆனால் மாகாணசபை தேர்தல் 4வருடங்களாக நிலுவைல் இருக்கிறது. அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை விட மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கே தேர்தல் ஆணைக்குழு முன்னுரிமை வழங்கவேண்டும்.
மேலும் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது ஓரளவு ஸ்திர நிலைக்கு வர ஆரம்பித்திருக்கிறது. நாடு சுமுகமான நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அதனால் ஹோட்டல்கள் நிரம்பிவழிய ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றனர்.இந்த சூழ்ச்சியில் மக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது.
அத்துடன் நாட்டின் நிதி நிலைமை தற்போது சீராகி வருகிறது. அதன் பிரகாரம் மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்பதற்கு ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் முகம்கொடுத்து வரும் மக்களாகவே இருந்து வருகின்றனர். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. அவர்களின் தொழில் மதிக்கப்படுவதில்லை.
மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலேயே அவர்கள் தோட்டங்களில் தொழில் செய்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
மேலும் எமது மக்கள் மீது காட்டப்பட்டு வரும் பாரபட்சம் ஒழிக்கப்பட வேண்டும். தேசிய நீராேட்டத்துக்குள் மலையக மக்கள் உள்வாங்கப்படவேண்டும் என்றால் ஏனைய சமூகத்தினருக்கு சமமாக வாழவேண்டும் என்றால் எம் மக்கள் மீது தினிக்கப்படும் இந்த பாரபட்சம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதற்காக பாடுபடவேண்டிய தேவை அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்கள் பிரதிநிதிகள் மீதும் இருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM