தேர்தலை தடையின்றி நடத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பு - துறைசார் உயர் அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் உறுதி

Published By: Vishnu

10 Mar, 2023 | 04:19 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தடைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. 

அதற்கமைய குறிப்பிட்ட காலத்திற்குள் வாக்குசீட்டுக்களை வழங்குவதற்கும் , அரச அச்சகத்திற்கான பாதுகாப்பினை வழங்குவதற்கும் , எரிபொருட்களை வழங்குவதற்கும் துறைசார் உயர் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கமைய , பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த தரப்பினரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து, திட்டமிட்ட தினத்தில் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தடைகளை நீக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய அந்தக் கலந்துரையாடலில் குறித்த அரச நிறுவனங்களுடன் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

அதற்கமைய அரச அச்சகமா அதிபரினால் தபால் மூல வாக்கெடுப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குசீட்டுக்களை 5 நாட்களுக்குள்ளும், ஏனைய வாக்குசீட்டுக்களை 20 - 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியும் என்றும் , அதற்கு தேவையான நிதியை நீதிமன்ற தீர்ப்பிற்கமைய நிதி அமைச்சிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு சீட்டுக்கள் அச்சிடப்படும் போது அரச அச்சகமா அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் தேவையான தினம் தொடர்பான தகவல்களை பொலிஸ்மா அதிபருக்கு வழங்குமாறும், அற்கமைய தேவையான பாதுகாப்பினை வழங்க முடியும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் (தேர்தல்) அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய தேர்தலின் போது தேவையான எரிபொருளை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் அதிகாரிகளால் எதிர்வரும் சில தினங்களுக்குள் வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18
news-image

சர்வதேச கடன் வழங்குனர்களுடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தங்களில்...

2024-04-17 18:03:56